மகனின் படத்தை கிழித்துத் தொங்க விட்ட எஸ்.ஏ.சி.. அப்படி என்னதான் நடந்தது?..
விஜய் குறித்து தேசிங்குராஜா படவிழாவில் இயக்குனர் எஸ்ஏ.சந்திரசேகர் பேசியது குறிப்பிடத்தக்கது. என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா...
இன்னிக்கு சினிமாவுல கதாநாயகன் 10 கொலை பண்றான். 3 மணி நேரம் படம் பண்றவங்க ஒரு 3 நிமிஷம் ஏதாவது ஒரு செய்தியை மக்களுக்கு சொன்னா என்னன்னு கேட்கிறார் எஸ்ஏசி. இதுல இருந்து என்ன தெரிகிறதுன்னா அவருக்கு ஒரு பொறுப்பு இருக்கு. அதே போல மற்ற இயக்குனருக்கும் ஒரு பொறுப்புணர்வு வேணும்.
முன்னாடி எல்லாம் கதை, வசனம், இயக்கத்திற்கு தனித்தனியா ஆள் இருப்பாங்க. 3 கை மாறி வருவதால தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கு. ஆனா இன்னைக்கு எல்லாமே ஒருவர் தான் பண்றாங்க. அப்படி இருக்கும்போது ஏன் இந்த மாதிரி அதாவது ஒரு நல்ல செய்தியைக் கூட சொல்ல முடியாம சிக்கல்கள் எல்லாம் வருது என்றும் கேட்கிறார் எஸ்ஏசி.
பொதுவாழ்க்கை வேறு. சினிமா வாழ்க்கை வேறு என்றும் சொல்கிறார். எழில் இயக்கத்தில் வந்தது துள்ளாத மனமும் துள்ளும். அன்று இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம். இதுக்கு காரணம் என்னன்னா இதோட கதை, திரைக்கதை நல்லா இருந்தது.
அந்தப் படத்துல யார் நடிச்சாலும் ஓடிரும். அதனால அதுதான் முக்கியம். லியோ படத்துல கிறிஸ்தவர்கள் நரபலி கொடுக்குற மாதிரியான காட்சி வரும். ஏன் இதெல்லாம் கொண்டு வந்தீங்கன்னு நான் கேட்டேன். ஆனா அவங்க யாரும் கண்டுக்கல. படத்தை வெளியிட்டுட்டாங்க. ஆனா ஒரு 5 நாள் கேப் இருந்தது. அவங்க நினைச்சா அதை மாத்திருக்கலாம் என்றார் எஸ்ஏசி. இதை எல்லாம் பார்க்கும்போது இது எஸ்ஏசியின் நேர்மையைக் காட்டுகிறது.
மேற்கண்ட தகவல்களை ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.
விஜய்க்கும், அவரது தந்தை எஸ்ஏசிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேச்சுவார்த்தை இல்லாமல் உள்ளது. முதலில் அவரது கதை இலாகாவை இவர் தான் கவனித்து வந்தாராம். துப்பாக்கி படத்திற்குப் பிறகு தான் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.