Sai Pallavi: அமரன் அதிரிபுதிரி ஹிட்... சம்பளத்தை 'டபுளாக்கிய' சாய் பல்லவி!..

#image_title
Amaran: அமரன் படத்தின் வெற்றியால் நடிகை சாய் பல்லவி தன்னுடைய சம்பளத்தினை அப்படியே டபுள் ஆக்கி இருக்கிறாராம். அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் அமரன். சிவகார்த்திகேயன் இராணுவ வீரராக நடிக்கிறார். அவருக்கு ஜோடி சாய் பல்லவி. இது மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். இது ஒரு உண்மை கதை, ஹீரோ கிளைமாக்ஸில் இறந்து விடுவார் என்பதால் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லை.
இதையும் படிங்க: Allu Arjun:’அந்த’ விஷயத்துல தளபதி விஜயை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்?
அதோடு ஷூட்டிங் நீண்ட நாட்களாக ஜவ்வு போல இழுத்துக்கொண்டே சென்றதால் சிவகார்த்திகேயன் ரொம்பவே அப்செட். ஆனால் படம் வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து அமரன் படத்திற்கு செம டிமாண்ட்.
ஓடிடி தளத்தில் தள்ளி வெளியிடுங்கள் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கும் அளவிற்கு இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. சொல்லப் போனால் மஹாராஜா, லப்பர் பந்து படங்களுக்கு பிறகு அனைவருக்கும் லாபம் கொடுத்த படமாக அமரன் இருக்கிறது.

#image_title
இந்தநிலையில் படத்தின் நாயகி சாய் பல்லவி தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். முன்னர் ஒரு படத்திற்கு ரூபாய் 3 கோடி சம்பளம் வாங்கிய அவர் தற்போது ரூபாய் 6 கோடி சம்பளம் கேட்கிறாராம்.
அமரன் படத்தின் வெற்றிக்கு சாய் பல்லவியின் நடிப்பே முக்கிய காரணம் என்பதால், தயாரிப்பாளர்கள் அவர் கேட்கும் சம்பளத்தினை அளிக்க தயாராக இருக்கின்றனர். அடுத்ததாக பாலிவுட்டில் சீதையாக சாய் பல்லவி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தலைப்பை மாற்றச் சொல்லி கடும் நெருக்கடி… பதிலுக்குப் பாக்கியராஜ் செய்த வேலை!