டைவர்ஸ் பீலிங்லாம் எனக்கு இல்ல!.. சைந்தவி கொடுத்த போஸ் பாருங்க!.. செம போட்டோஸ்!..

Published on: May 14, 2024
---Advertisement---

மிகவும் சிறுவயதிலேயே இசையமைப்பாளராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். வசந்தபாலன் இயக்கத்தில் உருவான வெயில் படம்தான் இவரின் முதல் படம். இந்த படத்தில் அவர் இசையமைத்த வெயிலோடு விளையாடி, உருகுதே மருகுதே பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது.

saindhavi

Also Read

அதன்பின் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க துவங்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்தால் கண்டிப்பாக ஒரு மெலடி இருக்கும். ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனாலும், அவ்வப்போது படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

saindhavi

ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில்தான் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த தகவலை இருவருமே மறுக்கவில்லை.

saindhavi

கணவன் – மனைவியாக பிரிந்தாலும் நல்ல நண்பர்களாக தொடர்ந்து பயணிப்போம் எனவும், தங்கள் சொந்த விருபத்திற்கு மதிப்பளித்து நடந்து கொள்ளுமாறு ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளுக்கு இருவரும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். சினிமாவில் பல இனிமையான பாடல்களை சைந்தவி பாடி இருக்கிறார்.

saindhavi

பையா படத்தில் இடம் பெற்ற அடடா மழைடா, சுறா படத்தில் இடம் பெற்ற தஞ்சாவூர் ஜில்லாக்காரி, மயக்கம் என்ன படத்தில் பிறை தேடும் உலகிலே, சூரரைப்போற்று படத்தில் இடம் பெற்ற கையிலே ஆகாசம் என பல பாடல்களை சைந்தவி பாடி இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சைந்தவி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

saindhavi