Cinema News
அமரன் பட நாயகி சாய்பல்லவிக்கு தேசியவிருதா? பிரபலம் சொல்றது இதுதான்..!
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளிக்குத் திரைக்கு வந்து பட்டையைக் கிளப்பி வரும் படம் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இருவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.
Also Read: Ajith: தீவிர ரசிகரா இருப்பாரோ?!… கமல்ஹாசனுக்காக அஜித் செய்த விஷயம்… இயக்குனர் சொன்ன சீக்ரெட்..!
அமரன்
மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்கை அற்புதமாக எடுத்து இருந்தார் இயக்குனர். சிவகார்த்திகேயன் மேஜராகவும், சாய்பல்லவி அவரது துணைவியார் இந்து ரெபேக்கா வர்க்கீஸ் ஆகவும் நடித்துள்ளனர். படத்தில் அவர்கள் கேரக்டர்களாக மாற ரொம்பவே மெனக்கிட்டுள்ளனர்.
துணிச்சல்
இந்தப் படத்தின் கதைக்காக இயக்குனர் முதலில் இந்த ரேபேக்கா வர்கீஸைத் தான் அணுகினாராம். அவர் சொன்னது தான் கதை. அதையே வடிவமைத்து இருப்பதால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படம் எடுக்கப்பட்டு இருக்கும்.
முக்கியமாக மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கிறதோ அதற்கு சற்றும் குறையாமல் அவரது மனைவியான இந்து ரெபேக்கா வர்க்கீஸ்சுக்கும் இருப்பதாகப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. படத்தில் கதையே அவரைச் சுற்றித் தான் நகர்கிறது.
சிறந்த நடிப்பு
அதனால் சிவகார்த்திகேயனுக்கு இணையாக சாய்பல்லவிக்கும் நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் இருந்தது. அந்த எதிர்பார்ப்பு சற்றும் குறையாத வகையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைத்துத் தரப்பு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுவிட்டார். மணிரத்னமே இவரது நடிப்பை வியந்து பாராட்டியுள்ளார்.
தேசிய விருது
அந்தவகையில் 2024க்கான தேசிய விருது சாய்பல்லவிக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கா என்று வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். 2024ல் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற சாய்பல்லவிக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நல்ல எண்ணம்
தமிழ்சினிமா உலகில் கவர்ச்சியை நம்பாமல் கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சாய்பல்லவி. அதனால் அவருக்கு படங்களின் வாய்ப்பு குறையாக இருந்தாலும் பரவாயில்லை.
எனக்குப் பிடித்த படங்களில் தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இந்த நல்ல எண்ணத்துக்காகவே அவருக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும்.