மன உளைச்சலில் இருந்து தப்பிக்க பிக்பாஸ் போனேன்.. ஆனா...? பிரபலம் பகிர்ந்த ஷாக் தகவல்
நான் இருந்த மன உளைச்சலில் இருந்து தப்பிக்க தான் பிக்பாஸ் போனேன். ஆனா அங்கு நடந்த சிலவற்றால் இப்போ மேலும் மோசமான நிலையில் இருப்பதாக பிக்பாஸ் பிரபலம் தெரிவித்து இருப்பது வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் துவங்கி 50 நாட்கள் கடந்து விட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கு இந்த நிகழ்ச்சியில் விஜே மகேஸ்வரி, ஏடிகே, திருநங்கை சிவின் கணேசன், ராம், குயின்சி, கதிரவன், மைனா நந்தினி, ரக்ஷிதா, அசீம், விக்ரமன், பொதுமக்களில் இருந்து தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர் என ஏகப்பட்ட பிரபலங்கள் இதில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி ஆறு சீசன்களாகி விட்டாலும், முதல் சீசனுக்கு இருந்த பரபரப்பு மற்ற சீசன்களுக்கு கிடைக்கவில்லை. கஞ்சா கருப்பு, பரணி, ஓவியா, காயத்ரி ரகுராம், சக்தி வாசு, ஜூலி, ஆர்த்தி, கணேஷ், ஹரிஷ் கல்யாண், ஆரவ், சினேகன் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஒரு லட்சம் கொடுத்தாலும் எனக்கு வேணாம்… ஆள விடுங்க.. பிக்பாஸ் வாய்ப்பை மறுத்த நடிகை
இதில் சிலருக்கு வாழ்க்கையே மாறியது எனக் கூட சொல்லலாம். நிகழ்ச்சியில் சொன்ன ஒரு பொய்யால் பல வருடமாக ட்ரோல் செய்யப்பட்டவர் ஜூலி. அந்த நிகழ்ச்சியில் அதிகம் கவரப்பட்ட ஓவியாவிற்கு தான் பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை ரசிகர்களாக இருந்தனர்.
இவரை பிக்பாஸில் பெரிதாக டார்க்கெட் செய்த காயத்ரி மற்றும் சக்தி இருவரையும் ரசிகர்கள் வெகுவாக விமர்சித்தனர். அதிலும் சக்தியை ட்ரிக்கர் சக்தி எனக்கூட கூப்பிட்டு வந்தனர். 6 வருடம் கடந்தாலும் இவர்களால் தங்கள் மீது விழுந்த நெகட்டிவ் இமேஜை மாற்றவே முடியவில்லை.
இதுகுறித்து சமீபத்தில் பேசி இருக்கும் சக்தி, அதிக மன உளைச்சலில் இருந்தேன். அதில் இருந்து மீள தான் நான் பிக்பாஸ் வீட்டிற்கே சென்றேன். ஆனால் அங்கு சென்று வந்தது. இன்னும் மோசமாக என்னை மாற்றி இருப்பதாக தெரிவித்தார்.
சின்னத் தம்பி திரைப்படத்தில் சின்ன வயது பிரபுவாக நடித்தார். அடுத்து நடிகன் திரைப்படத்தில் இளவயது சத்யராஜாக நடித்தார். தொடர்ந்து 2007ம் ஆண்டு தொட்டால் பூ மலரும் படத்தில் நாயகனாக நடித்தார். அப்படம் அவருக்கு சரியான தொடக்கத்தை கொடுத்தாலும் அதற்கடுத்து பெரிய வாய்ப்புகள் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.