அடிச்சி தூக்கும் சலார்!.. தெலுங்கு மட்டும் இத்தனை கோடியா?... ஆயிரம் கோடி கன்பார்ம் போல!...
Salaar movie: பொதுவாக கன்னட படங்கள் கர்நாடகாவை தாண்டி மற்ற மொழி ரசிகர்களிடம் ரீச் ஆகாது. ஆனால், கேஜிஎப் திரைப்படம் அது உடைத்தது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்த இந்த திரைப்படம் பக்கா மாஸ் ஆக்ஷன் படமாக வெளியாகி கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்தது.
அதைத்தொடர்ந்து வெளியான கேஜிப் 2 படமும் அனைத்து மொழிகளிலும் வசூலை அள்ளியது. அந்த படத்திற்கு பின் கவனிக்கத்தக்க இயக்குனராக பிரசாந்த் நீல் மாறிவிட்டார். எனவே, பிரபாஸ் மற்றும் மலையாள நடிகர் பிருத்திவிராஜ் ஆகியோரை வைத்து சலார் என்கிற படத்தை துவக்கினார்.
இதையும் படிங்க: பட்ஜெட் தாண்டி போன எஸ்.கே 21!.. கமலின் தலையில் விழுந்த இடி!. இந்த படத்திலயும் சம்பளம் போச்சா?!..
கடந்த பல மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்து படம் முடிவுக்கு வந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோ அனைத்து மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. சிறு வயதில் நண்பர்களாக இருந்த இரு சிறுவர்கள் பின்னாளில் எதிரிகளாக மாறுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது.
அதோடு, வழக்கம்போல் பிரசாந்த் நீல் ஸ்டைலில் அதிரடி ஆக்சன் காட்சிகளும் டிரெய்லரில் இடம் பெற்றிருந்தது. எனவே, ரசிகர்களிடம் இப்படத்திற்கு வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் வியாபாரமும் சூடு பிடித்திருக்கிறது. இந்நிலையில், சலார் படத்தின் தெலுங்கு மொழி திரையரங்க உரிமை மட்டும் ரூ.186 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாம்.
தெலுங்கு மொழி மட்டுமே இந்த அளவு எனில் கன்னடம், ஹிந்தி, தமிழ் எல்லாம் சேர்த்தால் இதுவே 500 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் தியேட்டர் மூலம் கிடைக்கும் லாபம், சேட்டிலைட் உரிமை, தொலைக்காட்சி உரிமை, வெளிநாடு வசூல் என எல்லாற்றையும் கணக்கிட்டால் இப்படம் ரூ.1000 கோடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 25வது படத்தில் சறுக்கிய நடிகர்களும், சாதித்த நடிகர்களும்!.. அட இவரும் லிஸ்ட்ல இருக்காரா!…