Cinema News
சாமானியன் படம் பார்த்த பிரபலங்கள் சொல்வது என்ன?.. வாங்க பார்க்கலாம்!..
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்கள் நாயகன் ராமராஜன் நடிப்பில் இன்று சாமானியன் படம் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
‘சூப்பரான மெசேஜ். படத்துல இளையராஜா சாங் அங்கங்க வந்தது ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கு. ராமராஜன் சார் ரொம்ப நாள் கழிச்சி நடிச்ச படம். சமுதாயத்துக்கு ரொம்ப முக்கியமான மெசேஜைக் கொடுத்த படம். எல்லாருக்கும் கொடுத்த கதாபாத்திரம் நல்லா அமைஞ்சிருக்கு. கண்டிப்பா இயக்குனருக்கு நல்ல வெற்றிப்படிக்கட்டு இருக்கு. ராமராஜனோட ரோல் ரொம்ப ஆணித்தரமா சொல்லப்பட்டு இருக்கு’ என்கிறார் நடிகர் மனோஜ்.
‘ராமராஜன் அவருடைய இயல்பான நடிப்பில் ஒரு சாதாரண மனிதனாக நடிச்சிருக்காரு. இன்னைக்கு யாருமே சாமானிய மக்களைக் கவனிக்கிறது இல்ல. அவங்க வெளியில தெரிய மாட்டாங்க. அவங்க குரல ரொம்ப பவர்புல்லா ராமராஜன் வெளிப்படுத்திருக்காரு. குரலற்றவர்களின் குரலா இந்தப் படம் வந்துருக்கு. இந்தப் படத்தில் ஒரு மகள் மீது தகப்பன் எப்படி பாசமா இருப்பான் என்கிற புதுவிதமான ராமராஜனை பார்க்கலாம்.
அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பும் உள்ளது. என்னோட பையன் இந்தப் படத்துல நடிச்சிருக்காரு. இளையராஜாவின் இசை ரொம்ப மெருகூட்டுது. ராமராஜனுக்கு இது ரீ-என்ட்ரி இல்ல. இன்னொரு அத்தியாயம்’ என்கிறார் திண்டுக்கல் லியோனி.
இதையும் படிங்க… ராமராஜனின் ‘சாமானியன்’ படம் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸா?!.. கெத்து காட்டும் மக்கள் நாயகன்!..
படத்தைப் பார்த்த நடிகர் ரோபோசங்கர் ’90ஸ் கிட்ஸ் எப்படி ரசிச்சோமோ அதே போல இன்னைக்கும் ராமராஜனோட ஓபனிங் சீனைக் கைதட்டி ரசிச்சோம். அப்போ மதுரை மரிக்கொழுந்து பாட்டு வருகிறது. பழைய ஹேர் ஸ்டைல்ல நாம பார்க்கும்போது ரொம்ப நல்லா இருந்தது’ என்கிறார்.
இந்தப் படத்தில் ‘சத்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் இப்படி சொல்கிறார். ‘இந்தப் படம் எல்லாருக்கும் பிடிக்கும். செகண்ட் ஆப் எமோஷனலா இருக்கு. கண்டிப்பா இந்தப் படம் எல்லாருக்கும் திருப்தியைத் தரும்’ என்கிறார். நடிகரும் தயாரிப்பாளருமான ராஜா சொல்லும்போது ‘இந்தப் படம் இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதனின் வாழ்வியலிலும் ஒன்றிப் போன ஒரு கருத்தைப் பதிவு செஞ்சிருக்காங்க’ என்கிறார்.
இதையும் படிங்க… ராமராஜனா கொக்கா!.. பக்காவான கதையில் பார்க்க வச்சுட்டாரே!.. சாமானியன் விமர்சனம் இதோ!..
இது ஒரு சமுதாய சிந்தனை, மக்கள் சிந்தனையுடன் வந்த படம் என்கிறார் ஒரு பிரபலம். நம்ம தகுதிக்கு மேல ஆசைப்படக்கூடாது. கடன் வாங்கக்கூடாது. வாழ்க்கையை வாழணும் என்ற மெசேஜ் சொல்லப்பட்டுள்ளதாம். சாமானியன் படத்தில் வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் போடும் கும்பலிடம் இருந்து சாமானியனாக வரும் ராமராஜன் புத்திசாலித்தனமாக கொள்ளையைத் தடுக்கிறார். இது போன்று அஜீத்தின் துணிவு படமும் வங்கிக் கொள்ளையைப் பற்றித் தான் சொன்னது என்பது குறிப்பிடத்தக்கது.