சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் ஏகப்பட்ட பிட்டு போட்டு ஒட்டியதெல்லாம்.. இப்படி ஒரே மாசத்துல உடையுதே!..

by Saranya M |   ( Updated:2023-09-24 04:40:14  )
சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் ஏகப்பட்ட பிட்டு போட்டு ஒட்டியதெல்லாம்.. இப்படி ஒரே மாசத்துல உடையுதே!..
X

இயக்குனர் சிவா நிர்வணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, முரளி ஷர்மா, வெண்ணிலா கிஷோர், ஜெயராம், ரோகினி மற்றும் பலர் நடித்த குஷி திரைப்படம் இந்த மாதம் செப்டம்பர் 1 உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.

நடிகை சமந்தா முன்னதாக நடித்த சாகுந்தலம் திரைப்படம் படுதோல்வியை தழுவிய நிலையில், குஷி படத்திற்காக விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து உடல்நிலை சரியில்லாத நிலையிலும் பயங்கர புரோமோஷன் செய்தார்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து 2 டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு!.. அந்த நடிகைக்கு கிடைக்க காரணமே அந்த மேட்டர் தானாம்!..

அதேபோல, தொடர்ந்து 5 ஆண்டுகளாக தோல்விப் படங்களை கொடுத்து வந்த விஜய் தேவரகொண்டா எப்படியாவது ஒரு வெற்றியாவது பெற வேண்டும் எனப்பெறும் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக சுமாரான வெற்றியை குஷி திரைப்படம் பெற்றது.

படத்தின் பட்ஜெட்டை விட வசூல் சற்று அதிகமான நிலையில், சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவருமே குஷி ஆகினார். ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தைப் போலவே இனி வரும் பெரிய படங்கள் கூட ஓடிடி நிறுவனங்கள் பெரும் தொகை கொடுத்து வாங்குவதால் அதற்கேற்ற அழுத்தங்களையும் கொடுத்து வருகின்றன.

இதையும் படிங்க: நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனா சண்டை தான் நடக்கும்!.. சூரி ஹீரோயின் உருட்டிய செம உருட்டு!..

படம் ரிலீஸான நான்கு வாரத்தில் ஓடிடியில் திரையிட வேண்டும் என்கிற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியான குஷி திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சீதாராமம் படம் போல மிகப்பெரிய வெற்றியை குஷி திரைப்படம் பிடிக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் குளியல் அறை காட்சிகளும், சில நெருக்கமான முத்தங்கள் மட்டும் மிஞ்சியதாக கூறுகின்றனர்.

Next Story