சமந்தா யாரோட பொங்கல் கொண்டாடியிருக்காங்க தெரியுமா?.. போகி கொளுத்தி, காத்தாடிலாம் விட்டுருக்காங்களே!

by Saranya M |   ( Updated:2024-01-15 09:07:07  )
சமந்தா யாரோட பொங்கல் கொண்டாடியிருக்காங்க தெரியுமா?.. போகி கொளுத்தி, காத்தாடிலாம் விட்டுருக்காங்களே!
X

நடிகை சமந்தா இந்த சங்கராந்தியை தனது வீட்டில் கோலாகலமாக கொண்டாடியுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கணவர் நாக சைதன்யாவை பிரிந்ததில் இருந்து எந்தவொரு பண்டிகையையும் ஹேப்பியாக கொண்டாடாமல் இருந்து வந்தார் சமந்தா.

மேலும், மயோசிடிஸ் நோய் பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்த அவர், தற்போது சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு சங்கராந்தியை முன்னிட்டு போகி கொளுத்தி, காத்தாடி விட்டு, வீட்டில் பொங்கல் கோலம் போட்டு ஜோராக பொங்கல் கொண்டாடி உள்ளார்.

இதையும் படிங்க: இப்படி மாறிட்டாரே கமல்!.. பக்கா ஸ்கெட்ச் போட்ட மணிரத்னம்!.. களமிறங்கும் உலக நாயகன்..

கடந்த ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் திரைப்படம் சரியாக ஓடவில்லை. அந்த படத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் படுநெருக்கமாக அவர் நடித்த குஷி திரைப்படம் வெளியானது. ஆனால், அந்த படம் சுமாராகவே ஓடியது.

அடுத்து பாலிவுட்டில் வருண் தவான் உடன் இணைந்து சிட்டாடல் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் சமந்தா. புதிதாக படங்களில் ஏதும் ஒப்பந்தமாகாமல் இருந்து வருகிறார். இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் பெரிய படங்களை டார்கெட் செய்து வரும் சமந்தா இந்த சங்கராந்தியை தனது செல்லப் பிராணிகளான நாய்க்குட்டி மற்றும் பூனைக்குட்டியுடன் கொண்டாடி உள்ள போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இதையும் படிங்க: கடைசி நேரத்தில் எஸ்.கே-வை காப்பாற்றிய பிரபலம்!.. அயலான் ரிலீஸாக காரணமே அவர்தானாம்!…

நடிகை சமந்தா அடுத்து யாரையும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதில்லை என்றும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்போதைக்கு அவருக்கு குழந்தைகளாக செல்லப் பிராணிகளை தற்போது வளர்த்து வருகிறார்.

Next Story