Connect with us
ayalaan

Cinema News

கடைசி நேரத்தில் எஸ்.கே-வை காப்பாற்றிய பிரபலம்!.. அயலான் ரிலீஸாக காரணமே அவர்தானாம்!…

Ayalaan movie: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எப்போது தான் நடிக்கும் படங்களை தானே தயாரிக்கும் ஆசை வந்ததோ அப்போதிலிருந்தே அவருக்கு ஏழரை துவங்கியது. சில படங்களில் ஏற்பட்ட நஷ்டம் அவரை 100 கோடி கடனாளியாக மாற்றியது. பல ஃபைனாஸ்யர்களுக்கும் அவர் அந்த பணத்தை கொடுக்க வேண்டியிருந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 7 வருடங்களாகவே அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெளியாகும் முதல் நாள் இரவு ‘எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தால் மட்டுமே இந்த படம் ரிலீஸ் ஆகும். இல்லையேல், படத்தை வெளியிட விடமாட்டோம்’ என ஃபைனான்சியர்கள் பஞ்சாயத்து செய்வார்கள். சிவகார்த்திகேயன் நேரில் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி படத்தை வெளியிட முயற்சி செய்வார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியில் நடந்த ரகளை!.. கடுப்பான வனிதா.. அக்காவ் கண்ணாடி எங்க?

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் சம்பளத்திலிருந்தும் ரூ.20 கோடியை கொடுத்து விடுகிறேன் என வாக்குறுதி கொடுத்தார். ஒரு படத்தில் மட்டுமே அப்படி கொடுத்தார். அதன்பின், பிரபல ஃபைனான்சியர் மதுரை அன்பு செழியனிடம் பணம் வாங்கி கொடுப்பார். அவரிடம் வாங்கிய பணத்திற்கு அவருக்கு கால்ஷீட் கொடுப்பார்.

sivakarthikeyan

ஒருமுறை அந்த கால்ஷீட்டை அன்பு செழியன் லைக்காவுக்கு விற்றுவிட, அவர்களின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியதாயிற்று. அயலான் படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்பும் இதே பஞ்சாயத்து நடந்தது. சிவகார்த்திகேயன் 27 கோடியை கொடுக்க வேண்டியது இருந்தது.

இதையும் படிங்க: எப்பவும் நான்தான் கெத்து!.. சம்பளத்தில் விஜயை தாண்டிய ரஜினி!.. நிரூபித்த சூப்பர்ஸ்டார்

அவரிடம் கால்ஷீட் கேட்டுக்கொண்டிருந்த ஒரு தயாரிப்பாளரிடம் ரூ.20 கோடி, மீதி பணத்தை பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்து அந்த கடனை அடைத்தார் சிவகார்த்திகேயன். அந்த பணத்திற்கு ஒரு சதவீதம் வட்டியும் கேட்டனர். ஆனால், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. பிரச்சனையை முடித்துவிட்டு இதோடு கடன் தீர்ந்தது என திருப்பதிக்கு போய்விட்டார். ஆனால், அங்கு சென்ற பின்னரும் இன்னும் 3 கோடியை அவர் கொடுக்க வேண்டும் என போன் பறக்க அங்கிருந்தவாறே அதையும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டாராம்.

ayalaan movie

ஒருபக்கம், சில வருடங்களுக்கு முன்பு இவரை வைத்து ‘சிங்கப்பாதை’ என்கிற படத்தை துவங்கிய கே.ஆர்.ராஜா என்கிற தயாரிப்பாளர் அந்த படத்தை காட்டி பிரபல ஃபைனான்சியர் சந்திர பிரகாஷ் ஜெயின் என்பவரிடம் ரூ.15 கோடி கடன் வாங்கினார். ஆனால், அந்த படம் டிராப் ஆகிவிட்டது. எனவே, அந்த கடனையும் சந்திர பிரகாஷ் சிவகார்த்திகேயனின் கணக்கில் சேர்க்க அயலான் படம் வெளியாகாது என்கிற நிலை உருவானது.

ஆனால், அந்த கடனை இதில் சேர்க்கக் கூடாது என வினியோகஸ்தர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் சொல்லிவிட அவர் ஜகா வாங்கினார். அதனாலேயே அயலான் படம் பிரச்சனை இல்லாமல் இப்போது வெளியாகியிருக்கிறது என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: மார்க் ஆண்டனி லுக்கில் மாஸ் காட்டுறாரே! புதிய பட போஸ்டருடன் பொங்கல் வாழ்த்து கூறிய சந்தானம்

google news
Continue Reading

More in Cinema News

To Top