அப்போது நித்தி அகர்வால்; இப்போது சமந்தா- கூட்ட நெரிசலில் சிக்கும் பிரபலங்கள்

Published on: December 22, 2025
samantha
---Advertisement---

நடிகர் பிரபாஸ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் தி ராஜா சாப். இந்தப் படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இந்த நிலையில் அந்த படத்தின் ‘சஹானா சஹானா’ பாடல் வெளியீட்டு விழா கடந்த 19ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை நிதி அகர்வால் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது கூட்ட நெரிசலில் சிக்கினார் நித்தி அகர்வால். அவரிடம் அத்து மீறியும் நடந்துகொண்டனர் ரசிகர்கள்.

இந்த நிலையில் நேற்று ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் சமந்தா. நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில் கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டார். உடனடியாக பாதுகாவலர்கள் மீட்டு சமந்தாவை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அவரை பாதுகாவர்கள் படாத பாடு பட்டு தான் காரில் ஏற்றி விட்டு இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

இதை கண்ட அவரது பாதுகாவலர்கள் உடனடியாகச் கூட்டத்திலிருந்து நடிகை நிதி அகர்வலை மீட்டு காரில் ஏற்றினர். காரில் ஏறிய நிதி அகர்வால் சிறிது நேரம், முகத்தை மூடிய படி அமர்ந்து வேதனை அடைந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Pokeamole_/status/2002703531611136116?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2002703531611136116%7Ctwgr%5Ebfda047ac1a20ae220fd42dea6cd4f40019efcfd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fhuge-crowd-mob-samantha-in-an-event-1766361960