நாக சைதன்யாவை தூக்கி போட்ட சமந்தா… இதுக்கு மட்டும் இவ்வளோ மரியாதையா?

Samantha: தமிழ் சினிமாவில் நடிகை சமந்தாவின் மார்க்கெட் சற்று சரிந்து இருக்கும் நிலையில், அம்மணி இரண்டாம் இன்னிங்ஸுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு முதற்படியாக மாஸான ஒரு விஷயத்தினை செய்து அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ மாய சேசாவே திரைப்படத்தின் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். முதல் படமே பெரிய ஹிட் கொடுக்க சமந்தாவின் புகழ் உயர்ந்தது. இதை தொடர்ந்து தமிழில் பாணா காத்தாடி படம் மூலம் நாயகியாக எண்ட்ரி கொடுத்தார். படம் ஹிட்டடிக்கவில்லை என்றாலும் சமந்தாவுக்கு முதல் படமே நல்ல ரீச்சை கொடுத்தது.

இதையும் படிங்க: எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!…

இதை தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். ஒரு கட்டத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். உச்சத்தில் இருக்கும் போதே சக நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இரு வீட்டாரின் சம்மதத்தோடு இந்து மற்றும் கிறிஸ்துவ மத முறைப்படி இவர்கள் திருமணம் கோலாகலமாக நடந்தது. தன்னுடைய பெயரையும் சமந்தா அக்கினினி என மாற்றிக்கொண்டார். சில காலம் நடிப்புக்கு ப்ரேக் கொடுத்த சமந்தா புஷ்பா படத்தில் ஒற்றை பாடலுக்கு ஆடி ஷாக் கொடுத்தார்.

இதையும் படிங்க: நான் ரொம்ப பிஸி!.. கண்டிஷன் போட்டு நடித்த எஸ்.பி.பி!.. அட அந்த சூப்பர் ஹிட் படமா!…

இதை தொடர்ந்து ஃபேமிலிமேன் என்ற இந்தி வெப் சீரிஸில் தாராளம் காட்டி நடிக்க கல்யாணம் வாழ்க்கையில் புகைந்தது. உடனே இருவரும் முறையாக அறிவித்து பிரிந்துவிட்டனர். இதில் ரசிகர்களுக்கே பெரிய வருத்தம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சமந்தாவும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சினிமா கேரியரில் கவனம் செலுத்த முடியாமல் போனார். சமீபகாலமாக தான் நடிப்பிலும் சமந்தா கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய கிறிஸ்துவ முறையிலான திருமண கவுனை சமந்தா மாற்றி வடிவமைத்து இருக்கிறார். வெள்ளை கலரில் ஜொலித்த அந்த கவுனை கருப்பில் மாற்றி விருது விழாவில் சமந்தா தோன்றி அனைவரையும் அசரடித்து இருக்கிறார். இது குறித்தான வீடியோவையும் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் சமந்தா பதிவிட்டு இருக்கிறார். அதில் ரசிகர்கள் தூக்கிப்போடாம அதை தன்னுடனே வச்சிக்க சமந்தாவின் மெனக்கெடலுக்கு பாராட்டுக்களும் குவிந்துள்ளது.

இதையும் படிங்க: அவரை பார்த்து இப்படி சொல்ல வேண்டுமா?!.. பாடகியை பார்த்து பயந்த எஸ்.பி.பி!..

சமந்தாவின் அந்த வீடியோவைக் காண: https://www.instagram.com/reel/C6MO0SvCsw0

 

Related Articles

Next Story