Categories: Entertainment News

ஏஞ்சலுக்கு றெக்க முதுகுலதான இருக்கும்!.. சமந்தாவுக்கு என்ன முன்னாடி இருக்குது?.. பறந்துட போகுது!..

அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் இன்று பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தி இந்த வருஷம் தங்கள் ஓடிடி தளத்தில் அடுத்தடுத்து வெளியாகப் போகும் அத்தனை படங்கள், வெப்சீரிஸ் உள்ளிட்டவற்றின் அறிவிப்புகளை வெளியிட்டனர்.

ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் ஏற்கனவே சமந்தா நடித்த தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தான் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில், சிட்டாடல் ஹனி பண்ணி வெப்சீரிஸ் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகும் என்கிற அறிவிப்பு இன்று வெளியானது.

இதையும் படிங்க: அஜித் ஒரு சுயநலவாதி!. பெருசா உதவிலாம் பண்ணது கிடையாது!.. காமெடி நடிகர் பேட்டி…

நடிகை சமந்தா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெள்ளி றெக்கைகளை கொண்ட ஏஞ்சலாக கலந்து கொண்டு அங்கிருந்த அத்தனை பேருக்கும் கண்குளிர கவர்ச்சி விருந்து கொடுத்தார். சூர்யாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் கங்குவா டீசரை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சமந்தா கண்ட மேனிக்கு கவர்ச்சியை காட்டும் உடையை அணிந்துக் கொண்டு நிகழ்ச்சியில் தாறுமாறாக கலக்கிய நிலையில், அவரது புகைப்படங்கள் இணையம் முழுவதும் இஷ்டத்துக்கு தற்போது பரவி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: சிங்கம்லாம் சும்மா!. வேறமாதிரி சீறுராரே சூர்யா!.. அட்டகாசமான கங்குவா டீசர் வீடியோ…

சிட்டாடல் வெப்சீரிஸ் அறிவிப்பு வெளியான நிலையில், சமந்தா செம சந்தோஷத்தில் உள்ளார். சீக்கிரமே தனக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்து விடும் என நம்பிக்கையில் சமந்தா இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Published by
Saranya M