குஷ்பூவுக்கு என்ன பெரிய கோவில்…? சமந்தாவுக்குப் பாருங்க… அசத்திய ரசிகர்!

kushboo, samantha
குஷ்புவுக்குக் கோவில் கட்டிய மாதிரி நடிகை சமந்தாவுக்கும் கோவில் கட்டி உள்ளனர். இங்காவது குஷ்பூவுக்குக் கோவில் கட்டியாச்சு கும்பாபிஷேகம் அது இதுன்னு சொன்னாங்களே தவிர கோவில் கட்டவில்லை. ஆனா அது ரொம்பவே ட்ரெண்ட்டானது. வைரலானது. திருச்சி பக்கத்துல ரசிகர்கள் ஒரு ஆர்வத்துல கோவில் கட்டப்போறதா சொன்னாங்களாம். அதுக்காக நோட்டீஸ் எல்லாம் அடிச்சிருக்காங்க.
அது உண்மையிலேயே கோவில் கட்டியதாகப் பரவி இருக்கு. ஆனா இன்னைக்கு வரைக்கும் அந்தக் கோவில் எங்கே இருக்குன்னு யாருக்கும் தெரியாது. கட்டுனா தானே தெரியும். ஆனா சமந்தாவுக்கு உண்மையிலேயே கோவில் கட்டி இருக்கிறார் ரசிகர் ஒருவர். அவ்வளவு வெறித்தனமாம். இதுகுறித்து என்னன்னு பார்க்கலாமா…
சமந்தா நேற்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்த சந்தீப் என்கிற ரசிகர் ஒருவர் சமந்தாவுக்குக் கோவில் கட்டி இருக்கிறார்.

தமிழ்சினிமாவில் ரசிகர்கள் தான் நடிகர், நடிகைகள்னா வெறித்தனமாக இருக்கிறார்கள் என்றால் ஆந்திராவிலும் அப்படித்தானே இருக்கிறார்கள். இங்காவது பரவாயில்லை. கோவில் கட்டப் போறதாகத்தான் சொன்னார்கள். அங்கே கட்டியே விட்டார்களே. சமந்தாவும் சரி. குஷ்புவும் சரி. சிறந்த நடிகைகள். பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்துள்ளனர். சினிமாவை டிக்கெட் கொடுத்துப் பார்க்கிறோம்.
மனம் விட்டு ரசிக்கிறோம். அதோடு அதை முடித்து விட வேண்டும். கோவில் கொடை எல்லாம் எதற்கு? அப்படி சாமி கும்பிடணும்னு ஆசையாக இருந்தால் குலதெய்வத்தைக் கும்பிடலாமே. இப்படி நடிகைகளுக்கு எல்லாம் கோவில் கட்ட ஆரம்பிச்சா குடும்பத்தை யார் கவனிப்பது? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.