Categories: Cinema News latest news

என்னை விட அந்த நடிகையைத்தான் பெருமையா பேசுனாங்க! ஆனா வந்து நின்னேன்ல!.. கெத்து காட்டும் சமந்தா!…

கோலிவுட்டில் இன்று வரை ஒரு கனவுக்கன்னியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. திருமண பிரச்சினைகளுக்கு பிறகுதான் ஒரு சரியான கம்பேக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்கின்றார். ஒரு முன்னனி நடிகையாக இருந்த எவரும் ஐட்டம் சாங்கில் ஆட தயங்குவார்கள்.

ஆனால் சமந்தா அதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் எதை செய்தால் நமக்கு நல்லது என யோசித்து செயல்பட்டு வருகிறார். ஊ சொல்றீயா பாடலில் சமந்தாவை விட வேறெந்த நடிகையும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் அதை ஒரு சவாலாக ஏற்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார்.

இதையும் படிங்க : என்னை எல்லாரும் வச்சி செஞ்சபோது கமல் சார் சொன்னது இதுதான்!.. நெகிழும் நெல்சன்!…

எதையும் துணிச்சலாக கையாளும் சமந்தா சமீபத்தில் குஷி பட புரோமோஷனுக்காக ரசிகர்களை சந்தித்து வருகிறார். விஜய் தேவரகொண்டா , சமந்தா நடிப்பில் தயாராகி வரும் குஷி படம் ஒரு பேன் இந்திய படமாக தயாராகியிருக்கிறது.

இந்த நிலையில் சமந்தாவிடம் சாகுந்தலம் படம் முழுவதும் உங்களை மையப்படுத்தியே எடுக்கப்பட்ட படம். அதில் அதிதி பாலன் எப்படி வந்தார் என்ற கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதில் கூறிய சமந்தா ஏன்  மகாநடி படத்தில் கீர்த்தி சுரேஷ் படத்தில் நான் நடிக்கவில்லையா? எல்லாரும் இப்படித்தான் நினைக்காங்க,

நான் பொதுவாக நடிக்கும் போது எந்தப் படம் என்றாலும் என்னுடைய ரோல் எப்படி பட்ட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், எந்தளவுக்கு முக்கியமானதாக இருக்கும் என்று யோசித்துதான் நடிப்பேன். காத்துவாக்குல காதல் படத்தில் கூட எல்லாரும் நயனுக்குத்தான் அதிகளவு முக்கியத்துவம் இருக்கும்னு சொன்னாங்க,

இதையும் படிங்க : 7ஜி ரெயின்போ காலணி 2-வுக்கு வந்த சிக்கல்!. இந்த தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு நிலமையா?!..

ஆனால் கதீஜாவாக அந்த ரோல் அதிகளவு பேசப்பட்டது. ஆனால் நயனுடன் சேர்ந்து பணிபுரியும் போது ஒரு வித புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது. நயன் ஒரு அற்புதமான திறமையான நடிகை, இருந்தாலும் கதீஜா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு சொல்லமுடியாத வகையில் அமைந்தது என அந்தப் பேட்டியில் சமந்தா கூறினார்.

Published by
Rohini