தென்னிந்தியத் திரையுலகில் ஒரு துணிச்சலான நடிகையாகத் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் வரலட்சுமி சரத்குமார். தற்போது அவர் நடிப்பதுடன் மட்டுமல்லாமல், ஒரு புதிய பரிமாணத்தில் களமிறங்கியுள்ளார். முதன்முதலாக ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் அவர். படத்தின் பெயர் சரஸ்வதி.
இந்தத் திரைப்படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படத்தின் தலைப்பு மற்றும் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் நாளை (சனிக்கிழமை) வெளியாக உள்ளது. இந்தச் சிறப்பான வெளியீட்டை வரலட்சுமியின் நெருங்கிய தோழியும், முன்னணி நடிகையுமான சமந்தா ரூத் பிரபு தனது சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக வெளியிடுகிறார்.
இந்தப் படம் ஒரு த்ரில்லர் பாணியில் இருக்கலாம் எனத் தெரிகிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…