More
Read more!
Categories: Cinema History Cinema News latest news

முதல் பட டீம் அப்படியே 100வது படத்திலும்!.. தமிழ் சினிமாவுல இது அமைஞ்ச ஒரே ஹீரோ அவர்தான்!..

திரையுலகை பொறுத்தவரை சில நடிகர்கள் மட்டுமே ஒரு இயக்குனரின் படங்களில் அதிகமாக நடிப்பது, ஒரு கதாநாயகியோடு அதிக படங்களில் நடிப்பது என கடந்து வந்துள்ளனர். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் ஜெயலலிதா, பத்மினி, சாவித்ரி, சரோஜாதேவி என சில நடிகைகளுடன் அதிக படங்களில் நடித்துள்ளனர்.

அதேபோல், சிவாஜியை மட்டுமே வைத்து படம் இயக்கிய சில இயக்குனர்கள் எம்.ஜி.ஆர் பக்கம் செல்ல மாட்டார்கள். அதேபோல்தான் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த சில இயக்குனர்கள் சிவாஜி பக்கம் செல்லமாட்டார்கள். இதுவும் ஒரு பக்கம் உண்டு. எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு பின் ரஜினி – கமலுக்கும் இப்படி இயக்குனர்கள் அமைந்தனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: சின்ன வயசிலேயே உதவி செய்து அப்பாவிடம் அடி வாங்கிய விஜயகாந்த்.. அப்போது அவர் எடுத்த தீர்க்கமான முடிவு!..

ரஜினியை வைத்து அதிக படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் கமலை வைத்தும் சில படங்களை இயக்கியிருக்கிறார். அதேபோல், ரஜினி – கமல் இருவரும் ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோருடன் அதிக படங்களில் நடித்துள்ளனர். இது சினிமாவில் சகஜம்தான். ஆனால், ஒரு நடிகரின் முதல் படத்தில் நடித்த சிலர் அப்படியே அவரின் 100வது படத்திலும் நடித்தார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?.

சினிமாவில் அதற்கே வாய்ப்பே இல்லை. ஆனால், ஒரு நடிகருக்கு நடந்தது. அவர்தான் நடிகர் அருண் பாண்டியன். இவர். இவர் அறிமுகமான முதல் திரைப்படம் ஊமை விழிகள். இப்படத்தில் அவருடன் விஜயகாந்த், கார்த்திக், செந்தில் ஆகியோர் நடித்திருப்பார்கள். அதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்தார் அருண்பாண்டியன்.

இதையும் படிங்க: எல்லோர் முன்னிலையிலும் கன்னத்தில் பளார்விட்ட விஜயகாந்த்.. வன்மம் வளர்த்து பழிவாங்கிய வடிவேலு!..

இவர் நடித்த 100வது திரைப்படம்தான் தேவன். இப்படத்தை அவரே தயாரித்து இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் விஜயகாந்த் நடித்து கொடுத்தார். அதேபோல், கார்த்திக், செந்தில் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இதுபோல எந்த நடிகருக்கும் அமைந்தது இல்லை.

அதே அருண்பாண்டியனை தனது கட்சியில் இணைத்து அவரை எம்.எல்.ஏ.வாகவும் மாற்றினார் விஜயகாந்த். ஆனால், ஒரு கட்டத்தில் விஜயகாந்திடமிருந்து விலகி வேறு கட்சியியில் இணைந்து விஜயகாந்துக்கு மன கஷ்டத்தை கொடுத்தார் என்பதும் வரலாறுதான்.

இதையும் படிங்க: 5 நாள் முழுக்க மரத்தின் மேலே நின்ற விஜயகாந்த்.. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணன் சொன்ன பகீர் தகவல்..

Published by
சிவா

Recent Posts