Cinema News
படத்தோட கதை லஞ்சம் வாங்கக் கூடாது.. ஆனா படத்துக்காக நான் கொடுத்த லஞ்சம்! சமுத்திரக்கனி ஆவேசம்
Actor Samuthirakani: தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த நடிகராகவும் வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சமுத்திரக்கனி. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழை விட தெலுங்கில் தான் இவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறது. ஏராளமான தெலுங்கு படங்களில் சமுத்திரக்கனியின் நடிப்பு அசர வைத்தது. தெலுங்கு திரையுலகமும் இவரை அன்போடு அரவணைத்துக் கொண்டது. குணச்சித்திர நடிகராக வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் சமுத்திரக்கனி அவ்வப்போது நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: சிவாஜியின் ஹிட் படத்தை பார்த்து எம்.ஜி.ஆருக்கு வந்த ஆசை!.. கடைசி வரைக்கும் நடக்காம போச்சே!…
இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய திரைப்படங்களாகவே வெளிவந்திருக்கின்றன. இந்த சமூகத்திற்கு நல்ல கருத்துள்ள படங்களை கொடுக்க வேண்டும் என்பதே சமுத்திரக்கனியின் ஆசை. பிளாக்பஸ்டர் ஹிட் ஆக வேண்டும் என்பதையும் தாண்டி மக்களுக்கு ஒரு நல்ல கருத்தை கொடுக்க வேண்டும் என்பதை இவருடைய எண்ணம்.
அந்த வகையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில்’ என்ற படத்தை இயக்கியவர் சமுத்திரக்கனி. அந்த படத்தின் கருவே லஞ்சம் கொடுக்கக் கூடாது என்பதுதான். அதில் ஜெயம் ரவி தன்னுடைய அபார நடிப்பால் அந்த படத்தின் கதையை அழகாக நகர்த்தி இருப்பார்.
இதையும் படிங்க: இந்நேரம் கேப்டன் மட்டும் உயிரோட இருந்தா சவுக்கடி நிச்சயம்! கம்முனு இருந்த பிரேமலதா
படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்திற்காக நான் கொடுத்த லஞ்சம் எக்கச்சக்கம் என ஒரு பேட்டியில் சமுத்திரக்கனி கூறியிருக்கிறார். அவருடைய சாட்டை மற்றும் அப்பா போன்ற படங்களின் படப்பிடிப்பை பெரும்பாலும் நெய்வேலி ஊரில் தான் நடத்தி இருக்கிறார்.
அங்கு இருக்கும் அதிகாரிகள் சமுத்திரக்கனிக்கு மிகவும் நெருக்கமாம். அதனால் அங்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது எனக் கூறிய சமுத்திரக்கனி நிமிர்ந்து நில் படத்திற்காக லஞ்சம் வாங்குவதற்காகவே அங்கு விதவிதமான ஆட்கள் வருவார்கள். அவர்களிடம் பணத்தை இரைத்தால் தான் அங்கு படப்பிடிப்பே எடுக்க முடியும். அந்த கட்டாயத்தில் தான் இந்த படத்தை நான் எடுத்தேன் என சமுத்திரக்கனி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: சோ சொன்னதை கேட்டு அரசு விருதை வாங்க மறுத்த கண்ணதாசன்!.. காரணம் இதுதான்!..