ஷங்கர் படத்தில் இணைந்த ராஜமெளலி பட நடிகர்!.. அப்போ இந்தியன் 2வில் இவரும் இருக்காரா?..

இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் தமிழ்நாட்டில் இருந்து நடிகர் சமுத்திரகனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவை தாண்டி அலா வைகுந்தபுரமுலோ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் வில்லன் நடிகராகவும் சமுத்திரகனி நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: டெபாசிட் இழந்த பவன் கல்யாண்!.. விஜய்க்கு தலையில் இடியே இறங்கிடுச்சாம்.. அப்போ அந்த சி.எம். கனவு?..

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் உடன் அவர் இருக்கும் புதிய புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வித் மை டைரக்டர் என பதிவிட்டுள்ளார்.

இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் ஷங்கர் பிசியாகி உள்ள நிலையில், கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் 3 படங்களில் சமுத்திரகனி முக்கிய ரோலில் நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் கிளப்பி வருகின்றனர்.

மேலும், தெலுங்கு படங்களில் தொடர்ந்து வில்லனாக சமுத்திரகனி மிரட்டி வரும் நிலையில், ஏற்கனவே ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் உடன் இணைந்து நடித்திருக்கும் வேளையில் கேம் சேஞ்சர் படத்தில் இவர் தான் மெயின் வில்லனா? என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: மருத்துவமனையில் விஜயகாந்த்!.. முந்திக் கொண்ட சூர்யா.. இன்னும் விஜய்க்கு மனசு வரலையேப்பா?..

சீக்கிரமே அதுதொடர்பான அப்டேட் அல்லது விளக்கத்தை சமுத்திரகனி தருவார் என்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ராம்சரண் படம் குறித்த எந்தவொரு அப்டேட்டையும் ஷங்கர் இதுவரை வெளியிடாத நிலையில், சமுத்திரகனியாவது வெளிப்படையாக சொல்லி இருந்தால் நல்லா இருந்திருக்கும் என ராம்சரண் ரசிகர்கள் ஃபீல் செய்து வருகின்றனர்.

விஜய்சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா போல சமுத்திரகனியும் தனது நடிப்புத் திறமையால் பல்வேறு மொழிகளில் நடித்து கலக்கி வருகிறார்.

Related Articles
Next Story
Share it