குந்தவை லுக்கில் சனம் ஷெட்டி..மெய்யாலுமே இது வேற லெவல்தான்!....
‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் பெற்றவர் சனம் ஷெட்டி. தமிழில் ‘அம்புலி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனை காதலித்தார்.
இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக காவல் நிலையம் வரை சென்று புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொண்டார். அதில், நேர்மையாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தார்.
இதையும் படிங்க: சமந்தா கூட நீ நடிக்க கூடாது… அவ ராசியில்லாதவ… எச்சரித்த பிரபல நடிகரின் மனைவி
ஆனால், ரசிகர்கள் அதிர்ச்சி தரும் வகையில் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின், தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை வேடத்தில் நடித்திருக்கும் திரிஷாவை போல் இவரும் உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.