Cinema News
லோகேஷ் மேல அப்படி கேஸ் போட்டதே காமெடியா இருக்கு!.. மாநகரம் பட நடிகர் என்ன சொன்னார் தெரியுமா?..
லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தனது படங்களில் வன்முறையை அதிகமாக கையாண்டு வரும் நிலையில், அவருக்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், சமிபத்தில் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், லோகேஷ் கனகராஜ் பற்றியும் அவர் மீது தொடுக்கப்பட்ட அந்த வழக்கு பற்றியும் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: பிக் பாஸ் வீட்டு பாத்ரூம்ல தாப்பாவே இல்லையா!.. என்ன கமல் சார்.. பிரதீப் ஆண்டனி சொல்றது நிஜமா?..
லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான மாநகரம் படத்தில் ஸ்ரீ மற்றும் சந்தீப் கிஷன் தான் ஹீரோக்களாக நடித்திருந்தனர். ஆரம்பத்தில் இருந்தே நான் தேர்வு செய்யும் இயக்குநர்கள் எல்லாம் நல்ல இடத்துக்கு சென்று விட்டனர். நான் மட்டும் தான் இன்னும் எனக்கான இலக்கை அடைய முடியவில்லை. ஆனால், நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என தெரிகிறது. மைக்கேல் படத்தை இயக்கிய ரஞ்சித் கூட இன்னும் சில ஆண்டுகளில் பெரிய இயக்குநராக வருவார் என நம்புகிறேன் என்றார்.
லோகேஷ் கனகராஜ் மீது அப்படியொரு வழக்கு போட்டதை நினைத்து சிரித்துக் கொண்டு இருந்தேன். குயிண்டீன் டரண்டினோ, சைக்கோ படத்தை இயக்கிய இயக்குநர் என்ன சைக்கோவா, பேய் படம் எடுக்கிறவங்களாம் என்ன பேயா? மாநகரம், மாஸ்டர் எல்லாம் வயலன்ஸ் படமே கிடையாது. சில படங்களை எப்படி சொல்ல வேண்டும் என்பது இயக்குநருக்குத் தெரியும் லோகேஷ் கனகராஜின் வளர்ச்சியை பார்த்து சிலருக்கு பொறாமையாக இருக்கலாம் என பேசியுள்ளார். உண்மையிலேயே நல்ல எண்ணத்துடன் சொல்லியிருந்தால் அதுவும் நல்ல விஷயம் தான். ஆனால், அதற்காக வழக்கு தொடுத்து ஒருவரை அசிங்கப்படுத்துவது தவறான செயல் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: என்ன ஏலியன் இப்படி கோபப்படுது!.. மாஸ் காட்டும் அயலான் டிரெய்லர்.. பொங்கலுக்கு வசூல் வேட்டை தான்!