ராஷ்மிகா மந்தனாவை ரா பகலா தூங்க விடாமல் டார்ச்சர் செய்த இயக்குனர்!.. அவர் ஒரு சரியான சைக்கோவாம்!..

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்வீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் மற்றும் பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாகி 10 நாட்களில் 650 கோடி ரூபாய் வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இன்று அதே படத்தை கபீர் சிங் என்னும் பெயரில் ரீமேக் செய்திருந்தார். அந்த படம் 400 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டி இருந்தது. தற்போது அதைவிட அதிகமாக அனிமல் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: வெற்றிமாறன் இவ்ளோ ஓட்டை கையா இருக்காரே!.. விடுதலை படம் அப்போ இத்தனை கோடி நஷ்டமா?.. அப்போ வாடிவாசல்!

ஏ சான்றிதழ் பெற்ற இந்த திரைப்படத்தில் அதிகப்படியான ஆபாச காட்சிகளும், லிப் லாக் முத்தக் காட்சிகளும், கொடூரமான சண்டைக்காட்சிகளும், ரத்தம் தெறிக்கும் கொலைவெறி காட்சிகளும் நிறைந்து உள்ளன.

மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் கிளம்பின. சந்தீப் ரெட்டி வங்கா ஒரு சைக்கோ இயக்குனர் என்றும் அவரைப் போலவே இந்த படத்தையும் சைக்கோ படமாகவே எடுத்து வைத்திருக்கிறார் என செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வெள்ளத்தில் தவிக்கும் மக்கள்!.. கண்டுக்கொள்ளாமல் ஷூட்டிங் போகும் பெரிய நடிகர்கள்.. ஹரிஷ் கல்யாண் பளிச்!

ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையே அதிகப்படியான அத்துமீறிய ஆபாச காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த காட்சிகளில் எல்லாம் நடிக்க வைக்க இரவு பகலாக ராஷ்மிகா மந்தனாவை அதிகமாக தொல்லை கொடுத்து சம்மதிக்க வைத்து படத்தை எடுத்துள்ளார் என்றும் ராஷ்மிகா மந்தனா இதற்கு மேல் சந்தீப் ரெட்டி கங்கா படத்தில் நடிக்கப் போவதில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் என்றும் செய்யாத பாலு கூறியுள்ளார்.

Related Articles
Next Story
Share it