கனவு நனவாகிடுச்சு!.. என் குருநாதருக்கே டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டேன்!.. சந்தோஷத்தில் சாண்டி!..

நடிகர் பிரபுதேவா அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் கோட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்து வருகிறார். சமீபத்தில், கோட் படத்தின் படப்பிடிப்பு இலங்கைக்கு பதிலாக கேரளாவில் நடைபெற்றது. நடிகர் விஜய் அங்கே கலந்து கொண்டு நடித்தார்.

விஜய்க்கு முன்பாகவே கேரளா சென்ற நடிகர் பிரபுதேவா அனுஷ்காவின் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் பிகைன்வுட்ஸ் தயாரிப்பில் பிரபுதேவாவும் ஏ ஆர் ரகுமான் இணையும் பிரம்மாண்ட படம் தயாராக போவதாகவும் அறிவிப்புகள் வெளியாகின.

இதையும் படிங்க: புளியங்கொம்பா புடிக்கும் ஸ்ருதிஹாசன்!.. திடீர்னு கமல் பொண்ணுக்கு அடிக்கும் அடுத்தடுத்த ஜாக்பாட்!..

இந்நிலையில் பிரபுதேவா மாஸ்டருக்கு கொரியோகிராஃபராக சாண்டி மாஸ்டர் ஒரு படத்தில் அமைக்கப்பட்டு அதன் நடனக் காட்சிகள் இலங்கையில் தற்போது நடைபெற்று வருகிறது.

பிரபுதேவா கோட் படத்தில் இந்த பாடலுக்கு நடனம் ஆடுகிறாரா? அல்லது வேறு ஏதாவது படமா என்பது சரியாக ரிவீல் செய்யப்படவில்லை. ஆனால் அதற்கு பதிலாக தனது குருநாதரை வைத்து ஃபேன் பாய் மூமென்ட்டாக கொரியோகிராபி செய்வது நீண்ட நாள் கனவு பலித்தது போல உள்ளது என சாண்டி மாஸ்டர் பிரபுதேவா நடனமாடும் புகைப்படங்களை வெளியிட்டு தனது சந்தோஷத்தை ஷேர் செய்து இருக்கிறார்.

இதையும் படிங்க: விரும்புகிறேன் படத்தில் நடிச்சது சினேகாவே இல்லையாம்… ஏமாத்திட்டாங்க மக்கா!

சாண்டி மாஸ்டர் தொடர்ந்து பல படங்களுக்கு நடன இயக்குனராக மாறி ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களையும் அதற்கு தகுந்த நடனங்களையும் கொடுத்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு கொரியோகிராஃபி செய்த சாண்டி மாஸ்டர் தற்போது முதல் முறையாக பிரபுதேவாவுக்கு நடனம் சொல்லித் தரும் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஏர்போர்ட் செட்டப் மேலும் சில இடங்கள் என பல இடங்களில் நடிகர் பிரபுதேவா நடனமாடும் காட்சிகளை தற்போது புகைப்படங்களாக சாண்டி மாஸ்டர் வெளியிட்டுள்ளார். சரிகம தமிழ் ஹாஷ்டேக்கை அவர் பயன்படுத்தியுள்ள நிலையில் ஏதாவது ஆல்பம் பாடலா? என்கிற கேள்வியும் எழுகிறது.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it