அப்போ சங்கீதாவால் தான் விஜய்க்கு இத்தனை பிரச்னையா?… ஆசையாய் சொல்லி பல்ப் வாங்கிய சம்பவம்..!

by Akhilan |   ( Updated:2023-10-13 07:40:45  )
அப்போ சங்கீதாவால் தான் விஜய்க்கு இத்தனை பிரச்னையா?… ஆசையாய் சொல்லி பல்ப் வாங்கிய சம்பவம்..!
X

Sangeetha Vijay: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் விஜயிற்கும் அவர் மனைவி சங்கீதாவிற்கு நடந்த திருமணமே ரொம்பவே நெருங்கி வட்டத்தினரை மட்டுமே அழைத்து செய்த திருமணம் தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சங்கீதா சொல்வதை விஜய் அப்படியே செய்வாராம்.

சினிமாவில் தந்தையின் வழியில் எண்ட்ரி கொடுத்தாலும் விஜயை ஒரு நடிகனாக மாற்றியது என்னவோ பூவே உனக்காக திரைப்படம் தான். அப்படம் ரிலீஸாகி செம ஹிட் அடித்த நிலையில் அவருக்கு தீவிர ரசிகையாக மாறியவர் தான் சங்கீதா.

இதையும் படிங்க: திரிஷாவால் லியோவுக்கு வந்த ஏழரை!.. இன்னும் எத்தனதான் வச்சிருக்கீங்க சொல்லுங்கடா!…

உடனே விஜயை பார்க்க வேண்டும் என நினைத்தவர் சென்னை கிளம்பி வந்துவிட்டார். அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த விஜயிடம் ஒரு வெளிநாட்டு தமிழ் பெண் வந்து இருப்பதாக தகவல்கள் சொல்லப்பட்டதாம். உடனே அவரை சந்தித்த விஜயிற்கு சங்கீதாவை பிடித்து விட்டதாம்.

வீட்டுக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறார். எப்பையுமே பெண்களை அழைத்து வராத விஜய் சங்கீதாவை வீட்டுக்கு அழைத்து வந்ததை பார்த்த பெற்றோர் சங்கீதா தான் தங்கள் மருமகள் என முடிவெடுத்து விட்டனர். உடனே இருவீட்டாரும் பேசி இவர்கள் திருமணத்தினை சிம்பிளாக முடித்து விட்டனர்.

இதையும் படிங்க: எக்ஸ்ட்ரா 20 நாளுக்கு கமல் போட்ட பில்!.. ஆத்தாடி இத்தனை கோடியா?!.. ஜவ்வா இழுக்கும் இந்தியன் 2 ஷூட்டிங்!...

அதன் பின்னரே விஜய் சங்கீதாவை லவ் செய்ததாக பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். மனைவி கேட்பதை அப்படியே செய்வதையே வழக்கமாக வைத்து இருந்தாராம் விஜய். அப்படி ஒருநாள் இருக்கும் போது சங்கீதாவுக்கு திடீர் ஆசை ஒன்று வந்திருக்கிறது. தெய்வதிருமகள் படத்தினை இயக்கிய ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டார்.

ஆனால் டைட்டான இருந்த கால்ஷீட்டால் விஜயால் இரண்டு வருடம் கழித்தே ஏ.எல்.விஜயை சந்தித்து எதுவும் கதை இருக்குமா எனக் கேட்டாராம். அதை தொடர்ந்து தான் தலைவா படத்தின் கதையை சொல்லி விஜய் அந்த படத்தில் நடித்தார். ஒரே டேக் லைனால் பல பிரச்னைகளை சந்தித்தார் என்பதும் கோலிவுட் வட்டாரமே அறிந்த செய்தி தான். மனைவிக்காக மனுஷன் படாதப்பாடு பட்டு போயிட்டாரே..!

Next Story