திரிஷாவால் லியோவுக்கு வந்த ஏழரை!.. இன்னும் எத்தனதான் வச்சிருக்கீங்க சொல்லுங்கடா!...

Leo movie: லியோ படத்தை எந்த நேரத்தில் துவங்கினார்களோ இந்த திரைப்படம் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. முதலில் இப்படத்தின் ஆடியோ விழாவை நடத்த முடியாமல் போனது. இதுவே விஜய் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக முடிந்தது. ஏனெனில், விஜயை நேரில் பார்க்கவும், அவர் பேசுவதை கேட்கவும் முடியாமல் போனது.

அதன்பின் இந்த படத்தின் ஹிந்தி டப்பிங்கை சேட்டிலைட் ஒப்பந்தம் காரணமாக வடமாநிலங்களில் வெளியிட முடியாமல் போனது. இதில் கிட்டத்தட்ட ரூ.100 கோடி வரை லாபத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ராம்சரணுக்கும் பெப்பே… தனுஷுக்கும் பெப்பே… லியோவில் நடந்த திடீர் ட்விஸ்ட்..!

அதன்பின் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அன்று அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு தயாரிப்பு நிறுவனம் அரசுக்கு விண்ணப்பம அனுப்பியது. ஆனால், அரசு தரப்பில் எந்த பதிலும் சொல்லவில்லை. அதோடு, காலை 9 அல்லது 11 மணி காட்சிதான் வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது. இதுவும் விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதோடு ஏமாற்றமாகவும் இருந்தது.

சமீபத்தில்தான் 5 காட்சிகள் திரையிட்டுக்கொள்ளலாம் என அரசு கூறியுள்ளது. ஆனால், அதிலும், காலை எந்த நேரத்திற்கு அனுமதி என குறிப்பிடவில்லை என்பதால் குழப்பம் நீடிக்கிறது. அதன்பின் லியோ டிரெய்லர் வீடியோவில் விஜய் பேசியிருந்த ஒரு வசனம் சர்ச்சையை ஏற்படுத்தி பல பெண்கள் அமைப்பும் இதற்கு கண்டனம் தெரிவித்தது. அதன்பின் லோகேஷ் கனகராஜ் இதற்காக மன்னிப்பும் கேட்டார்.

இதையும் படிங்க: ஜெயிலர் வடை வாயன்களுக்கு.. நல்லா வயிறு எரியட்டும்டா.. லியோ படைத்த சாதனை.. ப்ளூ சட்டை மாறன் ஜால்ரா!..

அதேபோல், இப்படத்தின் ‘நான் வரவா’ பாடலுக்கு நடனமாடிய 1200 பேர் தங்களுக்கு சொன்ன சம்பளத்தை கொடுக்கவில்லை எனக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், எங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். அதன்பின் அந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது.

ஒருவழியாக எல்லாம் முடிந்து படம் வெளியாகும் என எதிர்பார்த்தால் திரிஷா மூலம் லியோவுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. லியோ படத்தில் விஜயின் மனைவியாக நடித்துள்ள திரிஷாவுக்கு பாடகி சின்மயி பின்னணி குரல் கொடுத்துள்ளார். ஆனால், இவர் போது டப்பிங் யூனியன் உறுப்பினராக இல்லை.எனவே, அவரை வைத்து எப்படி டப்பிங் பேசலாம் என டப்பிங் யூனியன் அமைப்பை சேர்ந்த சிலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனராம். இந்த பிரச்சனையை தயாரிப்பாளர் தரப்பு எப்படி சுமூகமாக முடிப்பார்கள் என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க: பேடாஸும்மா.. ஐமேக்ஸ்மா!.. அடிபொலி.. அடுத்து அடுத்து ஹைப்பை எகிற வைக்கும் லியோ டீம்!..

 

Related Articles

Next Story