Connect with us

Cinema News

ஜெயிலர் வடை வாயன்களுக்கு.. நல்லா வயிறு எரியட்டும்டா.. லியோ படைத்த சாதனை.. ப்ளூ சட்டை மாறன் ஜால்ரா!..

ரசிகர்கள் மத்தியில் சண்டையை மூட்டி விட நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ப்ளூ சட்டை மாறன் UKவில் அனைத்து இந்திய படங்களின் ப்ரீ புக்கிங் சாதனையையும் லியோ முறியடித்துள்ளதாக அஹிம்சா என்டர்டெயின்மென்ட் பதிவிட்ட போஸ்ட்டை தூக்கி வந்து ரஜினிகாந்த் ரசிகர்களை ஓட்டி வருகிறார்.

லியோ படத்துக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது, விஜய் ரசிகர்கள் தியேட்டரில் சத்தம் போடாமல் படத்தை பார்க்க வேண்டும் என வன்மத்தை கக்கி வரும் ப்ளூ சட்டை மாறன் தென்னை மரத்தில் ஒரு குத்து, பனை மரத்தில் ஒரு குத்து என சரியான ஜால்ராவாக மாறியுள்ளார் என விஜய் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: சும்மா பூ சுத்திட்டு அலையிறானுங்க! யார் கொடுப்பா 200 கோடி விஜய்க்கு? காலை சுத்திய பாம்பால அடிபட்ட தளபதி

இந்த ஆண்டு வெளியான பதான், ஜெயிலர் படங்களை விட அதிகபட்சமாக முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை மூலம் இங்கிலாந்தில் லியோ திரைப்படம் முதலிடத்தை பிடித்து இருப்பதாக இங்கிலாந்தில் படத்தை வாங்கி வெளியிடும் விநியோக நிறுவனமான அஹிம்சா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது விஜய் ரசிகர்களை உச்சிக் குளிர செய்துள்ளது.

ஆடியோ லான்ச் நடைபெறாத நிலையில், தமிழ்நாட்டை தாண்டி எங்கேயும் லியோ வசூல் செய்யாது என பிதற்றிக் கொண்டிருந்த ரஜினி ரசிகர்களுக்கு வேட்டு வைக்கும் விதமாக லியோ தற்போது ஓவர்சீஸில் மாஸ் காட்டி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: இது நல்லா இல்ல… அட இது மோசமப்பா… எம்.எஸ்.வியையே கடுப்பாக்கிய எம்.ஜி.ஆர்… அதுக்குனு இப்டியா செய்வீங்க..!

விக்ரம் படம் 400 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய நிலையில், அசால்ட்டாக லியோ திரைப்படம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என்பதில் உறுதியாக உள்ளனர். புக் மை ஷோவில் தமிழ்நாட்டிலும் டிக்கெட் விற்பனைகள் அதிரடியாக தொடங்கி உள்ளன.

google news
Continue Reading

More in Cinema News

To Top