Connect with us

Cinema News

ராம்சரணுக்கும் பெப்பே… தனுஷுக்கும் பெப்பே… லியோவில் நடந்த திடீர் ட்விஸ்ட்..!

Leo movie: லியோ திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கி விட்ட நிலையில் இப்படத்தினை குறித்து பல்வேறு தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. அதில் சமீபத்தில் வெளியான ஒரு தகவல் குறித்த உண்மையும் தற்போது கசிந்து இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் லியோ. இப்படத்தின் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் மீதான ஆர்வம் தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. 

இதையும் படிங்க: ஜெயிலர் வடை வாயன்களுக்கு.. நல்லா வயிறு எரியட்டும்டா.. லியோ படைத்த சாதனை.. ப்ளூ சட்டை மாறன் ஜால்ரா!..

படத்தில் முதல்முறையாக 5 பாடல்கள் வரை லோகி வைத்து இருக்கிறார். ஏகப்பட்ட ஆச்சரியங்கள் காத்து இருப்பதாகவும் தொடர்ச்சியாக அவர் கொடுக்கும் பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார். இதனால் ரசிகர்களும் பெரிய ஆச்சரியத்துடன் படத்தின் ரிலீஸுக்கு காத்திருக்கின்றனர்.

லியோ படத்தின் டிக்கெட் புக்கிங் ஒருவழியாக தமிழ்நாட்டில் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தில் வில்லன்களான அர்ஜூன், சஞ்சய் தத்தின் க்ளிம்ஸ் வீடியோவே படம் வேற லெவலில் இருக்கும் என பேச்சுக்கள் எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் தான் லியோ படத்தில் ராம்சரண், தனுஷ் ஆகியோர் சில நிமிடங்கள் வருவார்கள் என தகவல்கள் கசிந்தது.

ஆனால் இதுகுறித்து மூத்த திரை விமர்சகர் அந்தணன் கூறும்போது லியோ படத்தில் ராம்சரண், தனுஷ் நடிப்பது 100 சதவீதம் உண்மை இல்லை. கமலிடம் மட்டும் தான் லோகேஷால் உரிமையாக கேட்க முடியும். ஆனால் அவரே கூட லியோ படத்தின் சில காட்சிகளுக்கு வாய்ஸ் கொடுத்து இருப்பதாக தான் தகவல்கள் கூறுகிறது. தனுஷ் மற்றும் ராம்சரண் ஆகியோர் விஜயிற்கு நண்பர்கள் தான்.

இதையும் படிங்க: சும்மா பூ சுத்திட்டு அலையிறானுங்க! யார் கொடுப்பா 200 கோடி விஜய்க்கு? காலை சுத்திய பாம்பால கடிபட்ட தளபதி

ஆனால் அவர்கள் கண்டிப்பாக இந்த படத்தில் நடிக்கவில்லை. அதே போல விஜய் அவர்கள் படத்தில் நடித்து விடுவாரா எனத் தெரிவித்து இருக்கிறார். ஜவான் படத்தில் விஜய் வருவார் என கடைசி வரை வெயிட் செய்து விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தது போல இதுவும் ஆகிவிட போகிறாது என்ற பேச்சுகளும் கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top