ஆர்யாவின் மொத்த பிசினஸும் காலி! நண்பேண்டா பாணியில் கூட இருந்தே குழி பறித்த சந்தானம்
Actor Santhanam: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சந்தானம். தன்னுடைய கிண்டலான பேச்சால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சந்தானத்தை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்த பெருமை சிம்புவிற்கே சேரும். வல்லவன் படத்தில் முதன் முதலில் நடிக்க வைத்தார்.
அதனை தொடர்ந்து பல படங்களில் பல ஹீரோக்களுக்கு நண்பனாக நகைச்சுவை செய்து வந்தார் சந்தானம். எந்த நடிகருடன் சேர்ந்து நடித்தாலும் சந்தானத்தின் காம்போ அந்த கூட்டணியை ஹிட்டாக்கி விடுகிறது. சந்தானம் - ஆர்யா, சந்தானம் - உதயநிதி, சந்தானம் - கார்த்தி இவர்கள் கூட்டணிதான் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் திடீரென சந்தானம் ஹீரோவாக புது அவதாரம் எடுத்தார்.
இதையும் படிங்க: என்னது மகள் முறையா? சர்ச்சைக்குள்ளான வேல ராமமூர்த்தியின் திருமணம்.. பின்னனியில் நடந்த சம்பவம் இதோ
20 படங்களுக்கு மேலாக ஹீரோவாக நடித்திருக்கும் சந்தானம் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தை ஆர்யாதான் தயாரிக்க இருக்கிறாராம். ஒரு சமயம் சந்தானத்தின் ஒரு பட விழாவிற்கு வந்திருந்த ஆர்யா மேடையில் சந்தானம் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது சந்தானம் அந்த படத்தின் பெயரை குறிப்பிட்டு ஒரு தயாரிப்பாளரிடம் இந்தப் படத்தை கொண்டு சென்றேன். ஆனால் அந்த தயாரிப்பாளரோ ஏதோ ஏதோ நிபந்தனைகளை போட தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி வந்துவிட்டோம் என்று கூறி கிண்டலடித்துக் கொண்டிருந்தார். அதை கேட்ட ஆர்யாவும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: கூட்டிக் கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்! சம்பளத்தை உயர்த்த இப்படி ஒரு ஸ்கெட்சா? சூர்யா கையாளும் யுத்தி
கடைசியில் அந்த தயாரிப்பாளர் வேறு யாருமில்லை. ஆர்.பி.சௌத்ரியாம். ஆர்யாவின் பல படங்களுக்கு சௌத்ரியிடம் இருந்துதான் ஆர்யா பணம் வாங்குவாராம். சந்தானம் இப்படி சொன்னதும் கடைசியாக ஆர்யாவுக்கே ஆப்பாக முடிந்து விட்டதாம். ஏனெனில் டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்திற்காக ஆர்யா சௌத்ரியிடம் தான் பணம் கேட்பார். ஆனால் இவரும் சேர்ந்து அந்த மேடையில் சிரித்துக் கொண்டிருந்ததனால் சௌத்ரி தரப்பில் ஆர்யா மீது பெரும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.