நீ அந்த பக்கம் போறீயா? நான் இந்த பக்கம் போறேன்.! வேண்டாத வேலையெல்லம் சரியாக செய்யும் சந்தானம்.!

by Manikandan |
நீ அந்த பக்கம் போறீயா? நான் இந்த பக்கம் போறேன்.! வேண்டாத வேலையெல்லம் சரியாக செய்யும் சந்தானம்.!
X

தற்போது தென்னிந்திய சினிமாவில் ஒரு பழக்கம் உண்டாகிவிட்டது. அதாவது தமிழ் நடிகர்கள் தெலுங்கு இயக்குனரை தேடி செல்கின்றனர், தெலுங்கு நடிகர்கள் தமிழ் இயக்குனர்களை தேடி வருகின்றனர். பல படங்கள் தற்போது தமிழ் தெலுங்கு திரைப்படங்களாக உருவாகிவருகிறது.

dp-17

தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். அதேபோல சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் திரைப்படத்தை அனுதீப் எனும் இயக்குனர் இயக்க உள்ளார்.

அதேபோல தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் புதிய படத்தை இயக்கி வருகிறார். ராம் சரண் ஹீரோவாக நடித்து வருகிறார். லிங்குசாமி தெலுங்கு ஹீரோவை வைத்து தற்போது படம் செய்து முடித்துவிட்டார்.

இதையும் படியுங்களேன் - உதட்டை பத்திரமாக பாத்துக்கோங்க.! ஷிவா நிர்வாணா
நல்ல வேளை ஓடிடி.! தியேட்டருக்கு வந்திருந்தா ரசிகர்கள் கதி?!

அனைவரும் தெலுங்கு தமிழ் என பரபரக்க, சந்தானம் மட்டும் கன்னட திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளார். கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் எனும் இயக்குனருடன் சந்தானம் புதிய படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த திரைப்படம் கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தயாராக உள்ளதாம்.

ஏற்கனவே அவர் நடிப்பில் பல திரைப்படங்கள் ரெடி ஆகி ரிலீஸ் ஆகாமல் காத்திருக்கின்றன. சர்வர் சுந்தரம், ஏஜென்ட் கண்ணாயிரம் என பல்வேறு திரைப்படங்கள் இன்னும் கிடப்பில் இருக்கின்றன. மேலும் மேலும் புதிய படங்களில் ஒப்பந்தம் செய்து நடித்து வருகிறார். முதலில் ஏற்கனவே ரெடியாக உள்ள திரைப்படங்களை ரிலீஸ் செய்யுமாறு ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கிறது என்று.

Next Story