More
Categories: Cinema News latest news

இதுக்கு பேரு புரமோஷனா?!.. பச்சோந்தி வேஷம் போடாதீங்க!.. சந்தானத்தை பொளக்கும் பிரபலம்..

Santhanam: நடிகர் சந்தானம் தேவையே இல்லாமல் ஒரு போஸ்ட் தற்போது நிறைய பேரிடம் வாங்கிக்கட்டி கொண்டு இருக்கிறார். அதிலும் அவர் தன்னுடைய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆடியோ வைரலாக அதற்கு பிரபல விமர்சகர் புளூசட்டை மாறன் போட்டு இருக்கும் எக்ஸ் பதிவு டிரெண்ட்டாகி வருகிறது.

பொங்கல்  தினத்துக்கு பதிவிட்ட நடிகர் சந்தானம் தன் படத்துக்கு புரோமோஷன் தேட நான் அந்த ராமசாமி இல்லை என கூடுதலாக சேர்க்க விஷயம் வெடித்தது. தனக்கு எதிராக செல்வதை உணர்ந்தவர். உடனே அந்த பதிவினையும் நீக்கிவிட்டார். இருந்தும் அதற்கு மன்னிப்பு கேட்கவில்லை.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு பிளாப் படங்கள் இவ்வளவு இருக்கா? எந்த ஊரில் இப்படி ஓடுச்சுன்னு தெரியுமா?

பெரியாரை அவர் விமர்சித்ததற்கு பலரும் நேரடியாக கண்டனம் தெரிவித்தனர். தற்போது வடக்குப்பட்டி ராமசாமி இசை வெளியீட்டு விழாவில் பேசிய சந்தானம், படத்தின் ஒரு விஷயம் சர்ச்சையானது. அதை படத்தின் புரோமோஷனாக எடுத்துக்கலாம் என்று தயாரிப்பாளரிடம் கூறினேன்.

நானும் இயக்குனர் கார்த்திக்கும் கவுண்டமணி ரசிகர்கள். அதனால் தான் அவரின் முதல் படம் டிக்கிலோனா, இந்த படம் வடக்குப்பட்டி ராமசாமி, அடுத்து நானும் ஆர்யாவும் நடிக்கும் படத்துக்கு கவுண்டமணி டயலாக்கை தான் வைப்பேன் எனவும் பேசி இருப்பார். மன்னிப்பே கேட்காமல் திமிராக பேசிய சந்தானம் ஆடியோ வைரலானது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக புரோமோஷனாக்காக எதை செய்தாலும் புரோமோஷனாகாது.

இதையும் படிங்க: இளையராஜா அந்த இடத்துல வாத்தியாரு மாதிரி… மகன் -மகள்னுலாம் பார்க்க மாட்டாரு…

அதனால் தான் ரெட்ஜெயண்ட் உங்கள் படத்தில் இருந்து விலகிவிட்டனர். தேவைப்படும் எடுத்திற்கு ஏற்றார் போல மாறுவது நீங்க ஒருவர் தான். அனைவருக்குமான காமெடியனாக இருக்கும் வரை தான் மதிப்பு. உங்களை மாதிரி பச்சோந்தியாக இருக்க கூடாது. இதை சீக்கிரம் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என புளூசட்டை மாறன் தெரிவித்து இருக்கிறார்.

Published by
Akhilan

Recent Posts