ஆர்யா பண்ணிய கூத்தைச் சொன்ன சந்தானம்… விழுந்து விழுந்து சிரித்த சிம்பு

santhanam str arya
Santhanam: டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ப்ரீ ஈவென்ட் விழாவில் சந்தானம் பேசியது கலகலவென இருந்தது. படத்தில் தான் காமெடின்னா நிஜ வாழ்க்கையிலுமா என்ற வண்ணம் இருந்தது. வாங்க என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.
டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ஆரம்பிச்சிட்டோம். ஆனந்த் போய் லைன் சொல்லிட்டான். ஆர்யாவுக்குப் பிடிச்சிப் போச்சு. சூப்பர் நாம பண்ணலாம்னுட்டான். நான் டிடி ரிட்டர்ன்ஸ் முடிச்சிட்டு வடக்குப்பட்டி ராமசாமி, இங்க நான்தான் கிங்கு எல்லாம் முடிச்சிட்டேன். அப்புறம் ஆர்யாவும் முழு கதையும் கேட்டுட்டேன்.
இதற்கு இடையில நான் ஒரு பழைய வீட்டை வாங்கிட்டேன். எங்க அம்மாவும், வைஃப்பும் வெள்ளிக்கிழமை அங்கே தான் விளக்கேத்தப் போவாங்க. அங்கே தான் வரப்போறோம்னு விளக்கேத்துவாங்க. அப்போ ஆர்யா கதை கேட்டு முடிச்சிட்டு 'மச்சான் எங்க இருக்க?'ன்னு கேட்டான். 'நான் ஒரு இடத்தை வாங்கிருக்கேன். அங்க ஒரு வீடு இருக்கு. அதை ரெனேஷன் பண்ணப்போறேன்'னு சொன்னேன்.
'சரி. அங்கேயே இரு. வாரேன்னு சொன்னான். வந்ததும் மச்சான் படம் சூப்பரா இருக்கு. எவ்வளவு செலவா இருந்தாலும் பண்ணிடலாம்'னு சொன்னான். அப்புறம் 'இது என்னடா?'ன்னு கேட்டான். 'இதுதான் வீடு'ன்னு சொன்னேன். உள்ளே போய் பார்த்துட்டு 'வீடு நல்லா இல்லடா இடிச்சிடு'ன்னு சொன்னான். நான் 'இடிச்சா நிறைய செலவு வரும்டா. நான் ரெனிவேஷன் பண்றதா இருக்கேன்'னு சொன்னேன். 'நீ இப்படித்தான் சொல்வே. அப்புறம் அது நல்லால. இது நல்லாலன்னுட்டு இருப்பே'. அப்படின்னு சொல்லிட்டு அவனுக்குத் தெரிஞ்ச பாய்கிட்ட சொல்லி வீட்டை இடிக்கச் சொல்லிட்டான்.
அடுத்த நாலு நாள்ல வீடு தரைமட்டமாகிடுச்சு. வெள்ளிக்கிழமை அம்மாவும், வைஃபும் வந்து விளக்கேத்துவாங்க இல்ல. நான் அவங்கக்கிட்ட வீட்டை இடிச்சதை சொல்லல. திட்டுவாங்கன்னு நினைச்சு. இந்தத் தெருவுல வீட்டைக் காணலன்னு தேடிருக்காங்க. அந்தத் தெருவுக்குப் போயிருக்காங்க. அப்புறம் எனக்குப் போன் அடிக்கிறாங்க. 'ராஜா நம்ம வீட்டைக் காணோம்பா'ன்னு. எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல.

அப்புறம் நான் வீட்டுக்கு வந்து சொல்றம்மான்னுட்டேன். ஆர்யா வந்தான் அன்னைக்கு. இந்த வீட்டை இடிச்சிடு. நாம புதுசா கட்டலாம்னு சொன்னான். அவன் சொன்னா கரெக்டா இருக்கும்மான்னு சொன்னேன். உடனே எங்கம்மா ஷாக்காகி 'ஏன்டா நீங்க ரெண்டு பேரும் படத்துல தானடா இப்படி பண்ணுவீங்க? நிஜ வாழ்க்கையிலுமா பண்ணுவீங்க? ஒரு வீட்டை இடிச்சிட்டு கிரௌண்டா ஆக்கி வச்சிருக்கீங்க'ன்னு சொன்னாங்க. இந்த லெவல்ல நாங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஷிப். ரெண்டு பேருமே அந்தக் கல்லூரியின் கதையில இருந்து இன்னைக்கு வரைக்கும் பயந்ததே கிடையாது.
சினிமாவுலயும் இப்படி பண்ணலாம். அப்படி பண்ணலாம். ஐயய்யோ இதைப் பண்ணினா இப்படி ஆகிடுமோ? அதைப் பண்ணினா அப்படி ஆகிடுமோன்னு பயந்ததே கிடையாது. எதுவா இருந்தாலும் தைரியமா பண்ணுவோம். வாழற வரைக்கும் ஜாலியா வாழ்வோம். நல்லபடியா வாழ்வோம். என்ன வருதோ பார்ப்போம். ஃபேஸ் பண்ணுவோம். போய்க்கிட்டே இருப்போம். அந்த ஒரு எனர்ஜிதான் இன்னைக்கு வரைக்கும் ஆர்யாவை இந்த இடத்துல புரொடியூசரா கொண்டு வந்து நிக்க வச்சிருக்கு என்கிறார் சந்தானம். இதைக் கேட்கும்போது சிம்புவும், ஆர்யாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.