குலுகுலு, சபாபதி, ஏஜென்ட் கண்ணாயிரம் என ரசிகர்களை மொக்கை காமெடி படங்களை கொடுத்து சோதித்த சந்தானம் ஒரு வழியாக டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் லேசாக கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்திருந்தார்.
அந்த படமும் பெரிய கதையெல்லாம் இல்லாமல் இருந்தாலும், ஒருமுறையாவது பார்க்கும் போது சில இடங்களில் சிரிக்க வைக்கும். அதற்கு மொட்டை ராஜேந்தர், சந்தானம் டீம் உள்ளிட்டவர்கள் பண்ண சேட்டை தான். ஆனால், இயக்குநர் பிரசாந்த்ராஜ் எந்தளவுக்கு ரசிகர்களை கிறுக்கு புடிக்க வைக்க முடியுமோ அந்தளவுக்கு இந்த படத்தில் ரசிகர்களை படுத்தி எடுத்து விட்டார்.
இதையும் படிங்க: குஷி விமர்சனம்: புருஷன் பொண்டாட்டியா விஜய்யும் சமந்தாவும் பர்ஃபெக்ட்டா இருக்காங்களே!..
கதைப்படி சந்தோஷ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தானம் எந்தளவுக்கு மோசமான எல்லைக்கும் சென்று விளம்பரங்களை பிடித்து விடக்கூடிய கெட்டிக்காரர். தம்பி ராமைய்யாவுடன் காமெடி என்கிற பேரில் இருவரும் காதுல புகை வர வைக்கின்றனர்.
அந்த பக்கம் மனோபாலாவின் விளம்பர கம்பெனியில் வேலை பார்க்கும் ஹீரோயின் டான்யா ஹோப் தடம், தாராள பிரபு படத்தில் நடித்த நடிப்பையும் மறந்து விட்டு கில்மா காட்டுறேன் என்கிற பெயரில் அடிக்கடி மூஞ்சியை காட்டி ரசிகர்களை பயமுறுத்தி விடுகிறார். கோவை சரளா, செந்தில், மன்சூர் அலி கான் என பல ஐட்டங்கள் உள்ளே இருந்தாலும் படம் எங்கேயும் ஒரு ஹை பாயின்ட் கூட இல்லாமல் திக்குத் தெரியாத காட்டில் ரசிகர்களை அலைய விட்டது போல அலைய விட்டுள்ளது.
இதையும் படிங்க: கடைசியா நெல்சனுக்கு காரும் வந்துடுச்சு!.. கலாநிதி மாறன் கொடுத்த லைஃப் டைம் செட்டில்மென்ட் வீடியோ இதோ!..
ஏகப்பட்ட டபுள் மீனிங் காமெடிகளை வைத்திருந்தாலும், ஏ ஜோக் கூட ரசிக்க முடியவில்லையே என ரசிகர்கள் எப்போடா படத்தை முடிப்பீங்க, எல்லோரும் வசனமா பேசி மனோகரா படத்தையே மிஞ்சுற அளவுக்கு இப்போ படம் ஓட்டுறீங்களே என புலம்பித் தள்ளுகின்றனர்.
டிடி ரிட்டர்ன்ஸ் வந்த வேகத்திலேயே இந்தப் படத்தையும் வெளியிட்டு கல்லா கட்டலாம் என நினைத்து ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. ஆனால், ஒரு மனசாட்சி இல்லையா சந்தானம் அடுத்த படத்தோட மார்க்கெட் படுத்து விடுமே அதை யோசிக்கலையா என்று தான் கேட்கத் தூண்டுகிறது. காமெடி கேமியோவாக வரும் பிரம்மானந்தம், நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த நடிகர் செந்தில் எல்லாமே சரியாக பயன்படுத்தவே இல்லை என்பது இயக்குநரின் திறமையில்லாத தனத்தை தெளிவாக காட்டுகிறது.
கிக் – எட்டி உதைக்கலாம்!
ரேட்டிங்: 1.5/5
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…