Cinema News
தலைவர் யார்னு காட்டிட்டாரு! நான் யாருனு காட்டுறேன் – ரஹ்மானை மிஞ்சும் சந்தோஷ் நாராயணன்
Santhosh narayanan : இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய 30 ஆண்டு சினிமா பயணத்தைக் கொண்டாடும் வகையில் மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பில் இசைக் கச்சேரியை நடத்தினார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த அந்த அரங்கினுள் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சில்வர், கோல்டு, பிளாட்டினம் என்ற வரிசைப்பட்டியலில் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டது. 40000 பேர் அமரக்கூடிய அரங்கம். ஆனால் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டோ 80000 என்று சொல்லப்படுகிறது. அதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லையாம்.
இதையும் படிங்க: ஜெயிலர் ஹிட்டுக்கு பின் லியோவில் நடந்த மாற்றம்!.. வெறித்தனமா வேலை பாக்கும் லோகேஷ் கனகராஜ்..
மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் அந்த இடமே போர்க்களமாக மாறியிருக்கிறது. மேலும் அந்த கூட்டத்தில் பெண்கள் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் தான் இப்போது மிகவும் பேசு பொருளாக மாறியுள்ளது.
மேலும் போலிஸும் இதை பற்றி விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ரஹ்மானும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பொதுமக்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னும் 15 நாள்களில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பட்டு கம்பளம் விரிக்கும் கேரளா…விஜயை வைச்சு செய்யும் தமிழ்நாடு… ஏங்க இப்டி?
ஆனால் சென்னையில் இல்லை. இலங்கையில் நடத்தப் போகிறாராம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அங்குள்ள தமிழக மக்களுக்காக முழுக்க முழுக்க இலவசமாக இந்த இசைக் கச்சேரியை நடத்த இருக்கிறாராம் சந்தோஷ் நாராயணன். மறக்குமா நெஞ்சம் சம்பவத்தால் இன்னும் பலத்த பாதுக்காப்பு ஏற்பாடுகளுடன் இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்களாம்.இது ஒரு பெரிய வரவேற்க்கத்தக்க நிகழ்வு என்று கூறிவருகிறார்கள்.