சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் தங்கள் குலதெய்வ கோயிலின் கும்பாபிஷேகத்திற்காக ஊருக்குச் சென்றுள்ளனர். அங்கே அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் தற்போது பதிவிட்டுள்ளார்.
61 வயதாகும் நடிகை ராதிகா சரத்குமார் பிரதாப் போத்தன், ரிச்சர்ட் ஹார்டி உள்ளிட்டோரை திருமணம் செய்து விவாகரத்து செய்த நிலையில், கடைசியாக சரத்குமாரை கடந்த 2001ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
இதையும் படிங்க: யாரும் கவலைப்படாதீங்க!.. விஜய் இடத்தை நான் நிரப்புறேன்.. வின் ஸ்டார் விஜய் சொன்னதை கேட்டீங்களா?
சரத்குமாருக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், ராதிகா சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்டார். பல ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் இருவருமே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டுள்ளனர்.
69 வயதாகும் சரத்குமார் இந்த வயதிலும் பெரிய பழுவேட்டரையராக ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்து மாஸ் காட்டுகிறார். கடந்த ஆண்டு வெளியான போர் தொழில், வாரிசு படங்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன.
இதையும் படிங்க: தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!.. பாலா இயக்கத்தில் இருந்து தெறித்து ஓடிய சூர்யா!.. இதுதான் காரணம்?
இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிராவயல் எனும் கிராமத்தில் உள்ள குலதெய்வக் கோயிலின் கும்பாபிஷேகத்தில் நடிகர் சரத்குமாரும் நடிகை ராதிகாவும் கலந்து கொண்டனர். அதன் புகைப்படத்தை தான் தற்போது ராதிகா பகிர்ந்துள்ளார்.
சந்திரமுகி 2 படத்தில் குலதெய்வ கோயிலை சீர்ப்படுத்தி பூஜை நடத்தும் கதாபாத்திரத்தில் தான் ராதிகா சரத்குமார் நடித்திருப்பார். தற்போது தங்களது சொந்த குலதெய்வ கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேகத்தில் கணவருடன் கலந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் அனிமல் படம் குறித்து ராதிகா சரத்குமார் போட்ட ட்வீட் வைரலான நிலையில், பேட்டி ஒன்றில் சரத்குமார் அந்த படத்தை பலரும் பாராட்டுகின்றனர் என்றால் நம்முடைய பார்வை தப்பா கூட இருக்கலாம் என அனிமல் படத்துக்கு ஆதரவாக பேசி அங்கேயே மனைவி ராதிகாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.