யாரும் கவலைப்படாதீங்க!.. விஜய் இடத்தை நான் நிரப்புறேன்.. வின் ஸ்டார் விஜய் சொன்னதை கேட்டீங்களா?

பவர் ஸ்டார் சீனிவாசன் போல தற்போது வின் ஸ்டார் விஜய் என்கிற பெயரில் எப்போதும் ராஜா படத்தை இயக்கி நடித்துள்ள நடிகர் சமீபத்தில் தனது படத்துக்கு தமிழ்நாடு முழுவதும் 25 தியேட்டர்கள் கிடைத்தது ரொம்பவே மகிழ்ச்சியை அளிக்கிறது என பட விழாவில் பேசியுள்ளார்.

சினிமா பிரபலங்கள் எங்கே பிரஸ்மீட் வைத்து பேசினாலும், அங்கே சில பத்திரிகையாளர்கள் காமெடிக்காவது விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் அவரது இடத்தை யார் நிரப்புவார் என கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!.. பாலா இயக்கத்தில் இருந்து தெறித்து ஓடிய சூர்யா!.. இதுதான் காரணம்?

ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்கள் விஜய் இடத்தை யாருமே நிரப்ப முடியாது. அது அவருக்கான தனி இடம் என சொல்லி வருகின்றனர்.

நெட்டிசன்கள் 2026க்கு பிறகு மீண்டும் அவரே வந்து அவர் இடத்தை நிரப்புவார் என மீம்களையும் போட்டுத் தாக்கி வருகின்றனர். இந்நிலையில், அதே போன்ற ஒரு கேள்வி வின் ஸ்டார் விஜய்யிடம் வைக்கப்பட்ட நிலையில், யாரும் கவலைப்படாதீங்க விஜய் சார் இடத்தை நான் நிரப்புறேன் என பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: என்னடா இது சலாருக்கு வந்த சோதனை!.. காவாலா சுனீலுடன் பிரபாஸை கோர்த்து விட்டுட்டாங்களே!..

யாருடா நீ எங்கே இருந்து வர என விஜய் ரசிகர்கள் எல்லாம் அந்த வீடியோவுக்கு கீழ் ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். மேலும், ரஜினிகாந்தின் தர்மத்தின் தலைவன் டைட்டிலில் அடுத்து நான் நடிக்கப் போகிறேன் என்றும் வரிசையாக கை வசம் படங்கள் உள்ளன என்றும் வின் ஸ்டார் விஜய் பேசியுள்ளார்.

 

Related Articles

Next Story