Cinema History
நாலு நாள் நடித்த அந்தப் படத்துக்காக தேம்பி தேம்பி அழுத சரத்குமார்… அப்படி என்னதான் நடந்தது?
சேரன் பாண்டியன் படத்தை சொன்னாலே எனக்கு சரத்குமார் தேம்பி தேம்பி அழுத ஞாபகம் தான் வருதுன்னு அந்தப் படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…
சேரன் பாண்டியன் படத்துல அவரு வர்ற சீனை மட்டும் எடுத்தேன். ஒரு பாட்டுக்கான சூட்டிங் அரை நாள் நடந்தது. உடனே எடுத்ததும் அவரை அனுப்பி வச்சிட்டேன். கிளைமேக்ஸ் உள்பட எல்லாமே ஒரு அஞ்சாறு நாள்ல எடுத்து முடிச்சேன். ஆனா டே நைட் ஒர்க் பண்ணுவாரு.
ஆனா இவருக்கு நாம என்ன ஒர்க் பண்ணினோம்னே தெரியாது. ஏன்னா ஊட்டில பவித்ரன் சூட்டிங். அங்க காலை 7 மணில இருந்து மாலை 6 மணி வரை சூட்டிங். அங்க இருந்து இவரே கார் ஓட்டிட்டு கோவை செம்மேடுக்கு வந்துடுவாரு. அங்க தான் இன்னைக்கு ஈஷா யோக மையம் இருக்கு.
நைட் 9 மணிக்கு இவரோட ஷாட் எல்லாம் எடுத்து 3 மணிக்கு இவரை விட்டுருவேன். இவரு மறுபடியும் ஊட்டிக்குப் போயி காலை 7 மணிக்கு ஷாட்டுக்கு ரெடியாகணும். அப்படி தூங்காம ஒர்க் பண்றாரு. எங்கிட்டயும் அவரு படம் நடிக்கணும். அங்க பவித்ரன். அது குஞ்சுமோன் தயாரிப்பாளர். அவருக்கும் முடிச்சிக் கொடுக்கணும். இதனால இவருக்கு என்ன நடிச்சோம்னே தெரியாது. படம் போர் பிரேம்ஸ் தியேட்டர்ல போட்டாச்சு. எல்லாரும் படம் முடிச்சிட்டுப் போறாங்க.
இதையும் படிங்க… பகத் பாசிலுக்கு மட்டும்தானா?!. பல பேருக்கு இருக்கு இந்த நோய்!.. பகீர் கிளப்பிய பிரபலம்..
இவரு தேம்பி தேம்பி அழறாரு. பால்கனியில நின்னு அழறாரு. இவரு யாரைப் பார்த்தாலும் கட்டிப்புடிச்சி அழறாரு. இவங்க மனைவி வந்து தேற்றி விடுறாங்க. ‘என்னங்க இப்படி அழறீங்க?’ன்னு கேட்குறேன். ‘நான் நாலு நாள் தான் நடிச்சிருக்கேன். நான் எல்லாம் இப்படி நடிச்சிருப்பேனான்னு எனக்குத் தெரியல.
என்னை வந்து இந்தப் படத்துல ஹீரோவா ஆக்கிட்டீங்க. நான் இவ்ளோ சீனு நடிச்சேனான்னு எனக்குத் தெரியல. என்னை வந்து அப்படி காட்டிருக்கீங்க’ன்னு சொன்னார். அதை என்னால மறக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.