மீசைய வளிச்சி விஜயகாந்த் படத்தில் வாய்ப்பு வாங்கிய சரத்குமார்!.. நாட்டாமை செம கில்லாடி!..
Actor sarathkumar : திரைப்பட வினியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக சினிமாவில் நுழைந்தவர் சரத்குமார். ஆனால், அது கிளிக் ஆகாமல் போகவே நடிகராக முயற்சிகள் செய்தார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படத்தில் வில்லனாக அசத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பின் கேப்டன் பிரபகாரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சில வருடங்கள் திரைப்படங்களில் வில்லனாகவே நடித்தார். அதன்பின் 'தாய் மொழி' என்கிற படத்தில் சரத்குமாரை ஹீரோவாக போட்டு படமெடுத்தார் விஜயகாந்த். அதன்பின் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: ஷங்கரை நம்பி சாம்ராஜ்யத்தை இழந்த ராம்சரண்!.. கேம் சேஞ்சர் ரிலீஸாக இத்தனை வருஷம் ஆகுமா?..
பல வருடங்கள் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், பிஸியான நடிகராகவும் மாறினார். சேரன் பாண்டியன், சூரியன், நாட்டாமை, சூரிய வம்சம், நட்புக்காக உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தார். இவருக்கு என தனி ரசிகர் கூட்டமும் உருவானது.
ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார். வாரிசு படத்தில் கூட விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்திருந்தார். அதேபோல், அசோக் செல்வனுடன் இவர் இணைந்து நடித்து வெளியான போர்த்தொழில் படமும் ஹிட் படமாக அமைந்தது. எனவே, இப்போது அவருக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: லியோ செகண்ட் சிங்கிள்.. ஜெயிலர் ’ஹுகும்’ ரேஞ்சுக்கு பதிலடி பாட்டா இருக்குமா?.. திருப்பிக் கொடுக்கணும்ல!..
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய சரத்குமார் ‘சினிமாவில் நடிக்க வேண்டும் என முயற்சி செய்த போது சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்போதுதான் புலன் விசாரணை படத்தில் வில்லனாக நடிக்க ஒருவரை தேடிகொண்டிருந்தார்கள். எனவே, விஜயகாந்தை சந்தித்து வாய்ப்பு கேட்டேன்.
அவர் என்னை அப்படத்தின் இயக்குனர் செல்வமணியை பார்க்க சொன்னார். அவருக்கும் என்னை பிடித்திருந்தது. ஆனாலும், அவரும், அவரின் உதவியாளரும் ‘எல்லாம் ஓகே. மீசை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்’ என அவர்களுள்ளேயே பேசிக்கொண்டிருந்தனர். இது என் காதில் விழுந்துவிட்டது. வெளியே சென்று வருகிறேன் என சொல்லிவிட்டு மீசையை எடுத்துவிட்டு வந்தேன்.
செல்வமணியிடம் ‘மீசை இல்லாமல் நான் இப்படித்தான் சார் இருப்பேன்’ என சொன்னேன். என்னை பார்த்து சிரித்துவிட்டு ‘இந்த படத்தில் நீங்கள்தான் நடிக்கிறீர்கள்’ என சொன்னார். அப்படித்தான் அந்த படத்தில் வில்லன் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என சரத்குமார் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: நிஜ வாழ்விலும் நண்பன் பட பாணியை கடைபிடித்த விஜய்… அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா?…