ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா:
இன்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக நேற்று சென்னையில் இருந்து திரைப்பிரபலங்கள் பலரும் மலேசியா நோக்கி படையெடுத்து வருகின்றனர். இது வெறும் இசை வெளியீட்டு விழா மட்டும் இல்லாமல் தளபதி கச்சேரியாகவும் சேர்ந்து நடைபெற இருக்கிறது.
அதனால் திரைப்பட பாடகர்கள் பலரும் இந்த விழாவிற்கு சென்று உள்ளனர். இதில் விஜய் இதுவரை நடித்த படங்களில் இருந்து குறிப்பிட்ட சில படங்களின் பாடல்களை தேர்ந்தெடுத்து அந்த கச்சேரியில் பாடகர்கள் பாட இருக்கிறார்கள். அதனால் இது ஒரு பெரிய பிரம்மாண்ட கச்சேரியாகவும் நடைபெற இருக்கிறது. எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன் என்பதாலும் விஜய் ரசிகர்கள் இதை உற்சாகமாக கண்டு களிக்க ஆயத்தமாகி வருகின்றனர்.
கோலாகலமாக இருக்கும் மலேசியா:
விஜயின் பெற்றோர் மற்றும் நாசர் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் என அடுத்தடுத்து வரிசையாக மலேசியா நோக்கி படையெடுத்து வருகின்றனர். மலேசியா முழுவதும் விஜய்க்கு உற்சாக வரவேற்பை கொடுத்து வருகின்றனர் அங்குள்ள விஜய் ரசிகர்கள். இந்த நிலையில் இன்று தூத்துக்குடிக்கு வருகை புரிந்த சரத்குமாரை பத்திரிக்கையாளர்கள் சந்தித்தபோது அவரிடம் விஜய் குறித்த சில கேள்விகளை கேட்டனர்.
இதற்கு முன் விஜயை நான் ஒரு அரசியல்வாதியாகவே பார்க்கவில்லை என்று சரத்குமார் கூறியிருந்தார். அதைப் பற்றிய கேள்விக்கு இன்னும் அரசியல் களத்தையே சந்திக்காத ஒருவர் தேர்தலை சந்திக்காத ஒருவரை எப்படி அரசியல்வாதியாக பார்க்க முடியும்? அவரின் நிலைப்பாடு என்ன? கொள்கை என்ன என்பது வரும் தேர்தலில் தான் தெரியும். அதன் பிறகு தான் அவர் எப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை கொண்டுள்ளார் என்று அனைவருக்கும் தெரியவரும்.

ஜனநாயகன் எடுபடுமா?
அதனால் தான் நான் அவரை அரசியல்வாதியாகவே பார்க்கவில்லை என்று கூறினேன் என விளக்கம் அளித்தார். ஜனநாயகன் எடுபடுமா எடுபடாதா என்ற ஒரு கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு சரத்குமார் நாம் ஜனநாயகன் நாட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது எப்படி எடுபடாமல் போகும். படத்தைப் பற்றி கேட்பதாக இருந்தால் அதை என்னிடம் கேட்காதீர்கள். அந்த படத்தை பார்த்து மக்கள் பதில் சொல்வார்கள் என்று சரத்குமார் பதிலளித்தார்.
