அடுத்த ஜென்மத்துல பாம்பாகப் பொறந்தாலும் படம் எடுக்க மாட்டேன்பா…! சரத்குமாரா இப்படி சொல்றது?

by sankaran v |
sarathkumar
X

sarathkumar

Sarathkumar: நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவர் சரத்குமார். இவர் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பின் கதாநாயகன் ஆனவர். கண்சிமிட்டும் நேரம், மிஸ்டர் கார்த்திக், ஜித்தன், தலைமகன், இது என்ன மாயம், சண்டமாருதம் என பல படங்களைத் தயாரித்துள்ளார். ஆனால் எதுவுமே பெரிய அளவில் வெற்றியைத் தரவில்லை. தனது திரையுலகப் பயணங்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

முதல்ல உடல் ஆரோக்கியத்தோடு வச்சிருக்கணும். அது ரொம்ப ரொம்ப அவசியம். அது சினிமாத்துறைக்கு மட்டுமல்ல. வாழ்க்கைக்கே அது அவசியம். அது சிறப்பா இருந்தா மனவலிமையும் இருக்கும். நான் எந்த ஒரு பள்ளிக்கூடத்துக்கும் கலைப்பயணத்துக்காக செல்லவில்லை. யதார்த்தமாக என் மனதில் ஒரு கதாபாத்திரம் இப்படித்தான் நடிக்க வேண்டும் என் மனதில் தோன்றியதை நடிச்சிருக்கேன்.

அதை செதுக்கிய பெருமை பல இயக்குனர்களுக்கு உண்டு. நான் செதுக்கப்பட்ட கலைஞன். ஆரம்பகாலகட்டத்துல என்னைக் கதாநாயகனாக்கிய இயக்குனர்னா அது செந்தில்நாதன். பாலைவனப்பறவைகள்ல வில்லனா இருந்த என்னைக் கதாநாயகன் ஆக்கினார். அவர் சிறந்த இயக்குனர். அப்புறம் மணிவாசகம். அவரது தங்கமான தங்கச்சி ஒரு வெற்றிப்படம்தான். அப்புறம் கட்டபொம்மன். எல்லாமே சக்சஸ்.

அப்புறம் ரவிக்குமார் என்னை உச்சத்துக்கேக் கொண்டு போனார். விக்ரமனும் அப்படித்தான். நடிகர்கள் திரைப்படங்களைத் தயாரிக்கிறது புத்திசாலித்தனம்னு நினைக்கிறீங்களான்னு கேட்டார். அதற்கு என்னதான் நாம பிளானிங் பண்ணினாலும் இங்க என்ன எழுதிருக்கோ அதுதான் நடக்கும். திரைப்படங்கள் எடுக்குறது சாதாரண விஷயம் கிடையாது.

அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா நான் நல்லபாம்பா பொறந்தா கூட படம் எடுக்க மாட்டேன்னுதான் சொல்வேன். அது புரியாத ஒரு பிசினஸ். டெய்லி நம்ம அந்த லிஸ்டைப் போட்டுக் கணக்குப் பார்க்குறதே பெரிய விஷயம். முதல்ல மல்லிப்பூ 50ரூபான்னு போட்டுருப்பான். கீழே ஜாஸ்மின் 100 ரூபான்னு போட்டுருப்பான். ரெண்டும் ஒண்ணுதானேன்னு கண்டுபிடிக்கிறதே ஒரு கலை என்கிறார் சரத்குமார்.

Next Story