More
Categories: Biggboss Tamil 7 latest news television

ரீ எண்ட்ரி கொடுத்து அசிங்கப்படும் விக்ரம்!… நெட்டிசன் தாண்டி தங்கச்சியும் கழுவி ஊத்துறாங்களே!..

Biggboss Tamil: பொதுவாக போட்டியாளர்கள் பிக்பாஸ் தமிழில் இருந்து வெளியேறிவிட்டு உள்ளே வரும் போது கொஞ்சமாவது தங்களுக்கு இருக்கும் நெகட்டிவ் இமேஜை காலி செய்து புகழ் தேடிக்கொள்ள தான் வருவார்கள். ஆனால் இந்த சீசன் 7ல் தான் எல்லாமே உல்டாவாக இருக்கிறது. 

தமிழ் பிக்பாஸ் சீசன்களிலேயே எப்போ தான் முடிப்பீங்க என ரசிகர்களே கேட்கும் அளவுக்கு நிறைய வெறுப்பை சம்பாரித்த ஒரே சீசன் 7 ஆக தான் இருக்கும். டைட்டிலை யாருக்காவது கொடுத்து முடிச்சி விடுங்க என பலரும் கருத்துகளை சொல்லி வருகின்றனர். 

இதையும் படிங்க: ஏதோ மிஸ் ஆகுது!.. தனுஷோட பெஸ்ட் இது இல்ல!.. ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறதா ‘கேப்டன் மில்லர்?..’..

இந்நிலையில் நாளை பைனல் மேடை ஏற இருக்கின்றனர். கடைசியாக விஷ்ணு, மணி, மாயா, அர்ச்சனா ஆகியோர் போட்டியில் இருக்கின்றனர். 100 நாளுக்கே எந்த டாஸ்க்கும் இல்ல. கடைசி வாரம் என்ன செய்ய என பழைய போட்டியாளர்களை உள்ளே இறங்கியது கிரியேட்டிவ் டீம்.

இவனுங்க வந்த அடிச்சிப்பானுங்களேயப்பா. அதையே தான் வந்த போட்டியாளர்களும் சரியாக செய்து வருகின்றனர். அதிலும் சரவண விக்ரம் வெளியேறும் போது மாயா செய்தவைகளை பல ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். விக்ரமின் தங்கையே மாயாவை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என ஓபனாக பேசி இருப்பார்.

இதையும் படிங்க: தன்னிடம் வேலை செய்தவரை விரும்பிய மகள்!.. ஏ.ஆர்.ரகுமான் என்ன செய்தார் தெரியுமா?

அதிலும் விக்ரமின் தங்கை சூர்யா, குடும்பத்தை விட மற்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் நீங்க தப்பான பாதையில் செல்வதாக அர்த்தம் என போஸ்ட் போட்டு இருக்கிறார். அங்க சுத்தி இங்க சுத்தி தங்கச்சியே சொல்லியாச்சு. தலைவரே வாய்ப்புக்காக இப்படியா அசிங்கப்படுவ என எக்ஸ் தளத்தில் பலரும் கலாய்த்து வருகின்றனர். சும்மா இருந்து இருக்கலாம்.

Published by
Akhilan

Recent Posts