Connect with us
captain miller

Cinema News

ஏதோ மிஸ் ஆகுது!.. தனுஷோட பெஸ்ட் இது இல்ல!.. ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறதா ‘கேப்டன் மில்லர்?..’..

Captain miller: ராக்கி, சாணி காயிதம் என அதிரடி சண்டை காட்சிகள் உள்ள திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம்தான் கேப்டன் மில்லர். இப்படத்திற்காக தனுஷ் நீண்ட தலைமுடி மற்றும் தாடியை வளர்த்திருந்தார். அதோடு, தனுஷ் கையில் துப்பாக்கியோடு நிற்கும் போஸ்டர்கள் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த படம் பொங்கலை முன்னிட்டு இன்று காலை உலகமெங்கும் வெளியானது. தனுஷின் ஒன் மேன் ஷோ, எபிக் பிளாக் பஸ்டர் என தனுஷ் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்கள் இப்படத்தை விமர்சனமும் செய்து வருகிறார்கள். படத்தின் குறைகளை அவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

miller

முதல் பாதியை விட 2ம் பாதி நன்றாக இருக்கிறது. தனுஷ் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜிவி பிரகாஷின் பின்னணி இசை பிரமாதமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் ஹீரோயிசத்தை தனுஷ் ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள். கிளைமேக்ஸ் காட்சியில் இருக்கும் டிவிஸ்ட்டும் நன்றாக இருக்கிறது. எமோஷன் காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஆனாலும், படத்தில் ஏதோ மிஸ் ஆகியிருப்பதாக உணர்வு வருகிறது.

இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு 100 சதவீதம் பூர்த்தி ஆகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்;. அங்கங்க பேட்ச் வொர்க் பண்ண மாதிரி இருக்கு. ‘கில்லர் கில்லர் கேப்டன் கில்லர்’ பாடலை தவிர மற்ற பாடல்கள் ஈர்க்கவில்லை. தனுஷுக்கு இது பெஸ்ட் படம் இல்லை’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

captain

படம் மெதுவாக நகர்கிறது. நிறைய இடத்தில் தேங்கி நிற்பது கொஞ்சம் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. திரைக்கதையை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம். தனுஷ் அவரின் நடிப்பின் மூலம் தாங்கி பிடிக்கிறார். தனுஷ் ரசிகர்களுக்கு பிடிக்கும். மற்றவர்களுக்கு இப்படம் ஒரு சுமாரான படம்தான் என சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top