Categories: Cinema News latest news

பெரிய பூசணிக்காயை சோத்துல மறைக்க முடியுமா?..சஸ்பென்ஸை உடைத்த சர்தார் படக்குழு!..

வரும் தீபாவளி திரைப்படமாக நாளை ரிலீஸாக உள்ள திரைப்படங்கள் சர்தார் மற்றும் பிரின்ஸ். இரு படங்களின் புரோமோஷன்களும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் நாளை தமிழகமெங்கும் வெளியிடப்படுகின்றன.

இதனிடையில் இந்த இரு படங்களின் ஹீரோக்களான கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஒருவருக்கொருவர் மேடையில் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். சர்தார் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வாங்கியிருக்கிறது. பி,எஸ்.மித்ரன் இயக்கத்தில் தந்தை மகன் என இரு வேடங்களில் கலக்க வருகிறார் நடிகர் கார்த்தி.

இதையும் படிங்க : “ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஃபைட் சீன்”… காதல் படத்தில் களேபரம் செய்ய நினைத்த எம்ஜிஆர்… ஆனால் நடந்ததோ வேறு!!

மேலும் இந்த படத்தில் ராஷிகண்ணா, லைலா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில் இது வரைக்கும் இரு வேடங்களில் நடிக்கிறார் கார்த்தி என்று தான் செய்திகள் வந்தன.

ஆனால் உண்மை என்னவென்றால் இந்த படத்தில் 16 கெட்டப்களில் வருகிறாராம் நடிகர் கார்த்தி. ஒரு வேளை இந்த சீக்ரெட்டை வெளிப்படுத்தியிருந்தால் கூட அந்த ஒரு பிரமிப்பிற்காகவாவது திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் அதை பற்றி இன்று வரை ஏன் டிரெய்லரில் கூட சொல்லவில்லை.

Published by
Rohini