Connect with us
MGR

Cinema History

“ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஃபைட் சீன்”… காதல் படத்தில் களேபரம் செய்ய நினைத்த எம்ஜிஆர்… ஆனால் நடந்ததோ வேறு!!

1966 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், மனோரமா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “அன்பே வா”. இத்திரைப்படத்தை ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கியிருந்தார். ஏவிஎம் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது.

எம்ஜிஆர் மக்களின் மனதில் புரட்சித் தலைவராக திகழ்ந்து வந்த காலத்தில் அவர் நடித்த திரைப்படம்தான் “அன்பே வா”. இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காதல் திரைப்படமாக உருவானது. வழக்கமாக எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் எதுவும் இத்திரைப்படத்தில் இடம்பெறாது. அந்த அளவுக்கு ஒரு Feel Good திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது.

Anbe Vaa

Anbe Vaa

இந்த நிலையில் “அன்பே வா” திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு நாள் எம்.ஜி.ஆர், ஏவிஎம் நிறுவனத்தாரிடம் “இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு ஆக்ரோஷமான சண்டை காட்சி இடம்பெற்றால் நன்றாக இருக்கும். இதுவரை ரத்தம் தெறிப்பது போன்ற சண்டைக் காட்சிகளில் நான் நடித்தது இல்லை. ஒரு வேளை அப்படி ஒரு சண்டைக் காட்சி இருந்தாலும் அதில் நடிக்கவும் நான் தயார்” என கூறினாராம்.

அதன் பின் ஏவிஎம் நிறுவனத்தார் எம்.ஜி.ஆர் கூறிய இந்த விஷயத்தை இயக்குனர் திருலோகச்சந்தரிடம் கூறினார்களாம். அதற்கு திருலோகச்சந்தர் “அப்படி ஒரு சண்டைக் காட்சியை எடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நான் எடுக்கத் தயார். ஆனால் எனக்கென்னவோ இத்திரைப்படத்தில் அப்படி ஒரு சண்டைக் காட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவில்லை. நாம் எடுத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் ஒரு சைவப்படம். இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் ஒரு மலரைப் போல மென்மையாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்” என்று கூறினாராம்.

Anbe Vaa

Anbe Vaa

இதனை கேட்ட ஏவிஎம் நிறுவனத்தார், திருலோகச்சந்தர் கூறியதை எம்.ஜி.ஆரிடம் கூறினர். அதற்கு எம்.ஜி.ஆர் சிறிது நேரம் யோசித்துவிட்டு “திருலோகச்சந்தர் கூறுவது சரியான விஷயம்தான். அதுதான் இத்திரைப்படத்திற்கும் சரியாக வரும்” என கூறிவிட்டாராம்.

எம்.ஜி.ஆர் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய நடிகர். அவர் நினைத்திருந்தால் அப்படி ஒரு சண்டைக் காட்சி நிச்சயமாக இடம்பெற வேண்டும் என்று கூறி அதனை சாத்தியப்படுத்தியிருக்கலாம். ஆனால் இயக்குனர் கூறியதை சிந்தித்துப்பார்த்து அதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். இது எம்ஜிஆரின் பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறது.

Anbe Vaa

Anbe Vaa

மேலும் “அன்பே வா” திரைப்படம் எம்.ஜி.ஆரின் சினிமாப் பயணத்திலேயே ஒரு சிறந்த காதல் திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top