இப்பல்லாம் தமிழ்ப்படத்துக்கு ஏன் ஆங்கிலப்பேரு? சசிக்குமார் கரெக்டா சொல்லிட்டாருப்பா!

by sankaran v |   ( Updated:2025-05-07 05:30:04  )
sasikumar
X

sasikumar

ஒரு காலத்தில் தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகைன்னு சொன்னாங்க. எந்தப் படமானாலும் தமிழில் தான் பேரு வச்சாங்க.

தமிழ்ல பேரு வைக்கிற படங்களுக்கு வரி ரத்து செய்றதுக்கு முன்னாடி அதுக்கு 25 சதவீத கேளிக்கை வரி வாங்கினாங்க. இதுல 90 சதவீதம் நேரடியா அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போய்ச் சேர்ந்துடும். 2006ல திமுக தான் வரிவிலக்கு கொண்டு வந்தது. அதுக்கு முன்னாடி இல்லையான்னா அப்பவும் இருந்தது.

அப்போ நல்ல சமூகத்துக்குத் தேவையான கருத்தோட படம் வந்தா வரிவிலக்கு. இதுல என்ன பிரயோஜனம்னு கேட்டா ரசிகர்ளுக்கு பாதி விலையில் டிக்கெட் கிடைக்கும். ஆனா 2006ல வரிவிலக்கு வந்த பின்னாடி டிக்கெட் விலை உயர்ந்தது. தயாரிப்பு லாபமானதும், நடிகர்கள் சம்பளமும் உயர்ந்தது. இதுதான் இந்த சலுகையால வந்த குற்றச்சாட்டு.

2011ல் அதிமுக வந்ததும் இந்த விதி மாற்றப்பட்டது. அப்போ தமிழ்ல பேரு வச்சா மட்டும் பத்தாது. சின்ன பட்ஜெட் படங்களாகவும் இருக்கணும்னு சொன்னாங்க. அதே நேரம் பெரிய பெரிய ஹீரோ எல்லாம் கோடிகள்ல சம்பளம் வாங்கறாங்க. அதனால வரிச்சலுகை கிடையாது. பத்துக்கு யூ சர்டிபிகேட் வேணும். தேவைக்கு அதிகமா வேற மொழியைப் பயன்படுத்தக்கூடாது. வன்முறை, ஆபாசம் இருக்கக்கூடாதுன்னு சொல்லி கட்டுப்பாடு விதிச்சாங்க.

அப்போதான் ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரின்னு எல்லாம் சேர்ந்து வந்தது. 2017ல் மத்திய அரசு 28 சதம் ஜிஎஸ்டிவரி, 30 சதம் உள்ளாட்சி வரின்னு போட்டுச்சு. இதனால திரைத்துறை ரொம்பவே பாதிக்கப்படும்னு புதுப்படங்கள் ரிலீஸ் ஆக்குறதை நிறுத்தினாங்க. அப்புறம் நடந்த பேச்சுவார்த்தையோட முடிவுல கேளிக்கை வரியை 8 சதவீதமா குறைச்சாங்க.

#image_title

அந்த சமயத்துல தான் காந்தி, காமராஜ், ராமானுஜன் படங்கள் வந்தது. குறைந்த டிக்கெட் தான். வரிச்சலுகையும் கிடைச்சது. இந்த நிலையில் டூரிஸ்ட் ஃபேம்லி ஹீரோ சசிக்குமார் இது சம்பந்தமா ஆங்கில பெயர் வைக்க காரணம்னு ஒரு கருத்தைச் சொல்லிருக்காரு. என்னன்னு பாருங்க.

தமிழ் பெயர் வைப்பதை நாங்கள் தவிர்க்கவில்லை. 3 மொழிகளில் ஓடிடியில் படத்தை விற்கும்போது ஆங்கில தலைப்பு வைக்க வேண்டியுள்ளது. தமிழ் மட்டும் அல்லாமல் படத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்படுகிறது. முன்பு தமிழில் படத்தின் பெயர் வைத்ததால்தான் வரிச்சலுகை உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை என்கிறார் சசிக்குமார்.

Next Story