நடிகையை ஏமாற்றி நடிக்க வைத்த சசிக்குமார்… அட அந்த சூப்பர்ஹிட் படமா?

2008ல் வெளியான சூப்பர்ஹிட் படம் சுப்பிரமணியபுரம். இந்தப் படத்தில் முக்கியக் கேரக்டரில் நடிக்க வைக்க ஒரு காதல் ஜோடி தேவைப்பட்டது. அது வேறு யாருமல்ல. நடிகர் ஜெய், நடிகை சுவாதி தான். இந்தப் படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகியிருக்கும். கண்கள் இரண்டால் என்ற அந்த ஒரு பாடலே போதும். படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வந்த புதிதில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் ஒட்டுமொத்தமாக திரையரங்கிற்குப் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்தப் படத்தில் இந்தக் காதல் ஜோடி எப்படி நடிக்க வந்தது என்பது சுவாரசியமான விஷயம். வாங்க. அதைப் பற்றிப் பார்ப்போம்.

Subramaniyapuram

சென்னை – 600028 என்ற படம் அப்போது ரிலீஸ் ஆகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருந்தது. சுப்பிரமணியபுரம் படத்திற்கு நடிகரைத் தேடி அலைந்து கொண்டு இருக்கிறார் இயக்குனர் சசிக்குமார். அப்போது சென்னை- 600028 படத்திற்கான போஸ்டரைப் பார்க்கிறார். அதில் இருந்த பல முகங்களில் ஒரு முகம் இவருக்குப் பிடித்து விட்டது. அதுதான் ஜெய். உடனே அவரை அழைத்து நீண்ட தலைமுடியும், தாடியும் வைத்துக் கொண்டு வா. கேரக்டர் ரெடியாக இருக்கிறது என்கிறார். அதே போல வருகிறார். அப்படித் தான் ஜெய் படத்திற்குள் வந்தார்.

அதே போல ஒரு முறை தெலுங்கு நடிகையான சுவாதியையும் சந்திக்கிறார். அவரிடம் இந்தப் படத்தில் நடிக்கிற வாய்ப்பு பற்றி சொல்ல அவரும், படத்தின் முடிவு எப்படி சோகமா, மகிழ்ச்சியா என கேட்கிறார். அதற்கு மகிழ்ச்சியான முடிவு தான் என்கிறார். அதன்பிறகு சம்மதம் தெரிவிக்கிறார். கண்கள் இரண்டால் பாடலை மட்டும் எடுத்து அவரிடம் போட்டுக் காட்டி இருக்கிறார்.

இதையும் படிங்க… கில்லி பாத்துட்டு உன்ன லவ் பண்ணேன்… பிரகாஷ்ராஜிடம் சண்டை போட்ட பெண்மணி!…

அதன்பிறகு அவர் மகிழ்ச்சி என்று சொல்லி இருக்கிறார். ஆனால் படத்தின் முடிவில் ஜெய் இறந்து விடுகிறார். என்ன நீங்க மகிழ்ச்சியான முடிவு என சொன்னீங்களே என சசிக்குமாரிடம் சுவாதி சண்டை போட, அதன்பிறகு அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தாராம் சசிக்குமார். அப்புறம் படம் ரிலீஸாகி பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

Recent Posts

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

32 minutes ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

10 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

11 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

12 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

13 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

13 hours ago