Connect with us
Rajni, Sathyaraj

Cinema News

ரஜினியுடன் இணையும் சத்யராஜ்… மோடி வேடத்தில் நடிக்கப் போகிறாரா? அவரே சொன்ன ‘நச்’ பதில்

நடிகர் சத்யராஜ் படங்கள் என்றாலே அதற்கு இன்றும் ஒரு கிரேஸ் இருக்கத் தான் செய்கிறது. கமல், ரஜினி வரிசையில் சமகால நடிகரான சத்யராஜ் ஒருவர் தான் இன்று வரை சினிமா உலகில் பிசியாக நடித்து வருகிறார். இதுபற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் பிரபல சினிமா விமர்சகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனுடன் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார். சமீபகாலமாக சத்யராஜ் பிரதமர் நரேந்திரமோடி வேடத்தில் அவரது பயோபிக்கில் நடிக்கப்போகிறார் என்ற செய்தியும் வெளியாகி வருகிறது. இதுகுறித்தும் இருவரும் அலசுகிறார்கள்.வாங்க என்னன்னு பார்ப்போம்.

சத்யராஜ் அடுத்து ரஜினியுடன் இணைந்து நடித்துக் கொண்டு இருக்கிறாராம். அந்தப் படத்தில் ரஜினியும், அவரும் நண்பராம்.

Weapon

Weapon

‘வெப்பன்’ படத்தின் ஆடியோ லாஞ்சில் நடந்த விஷயம். அப்போ சத்யராஜோட குளோஸ் அப் போட்டோவில் பார்ப்பதற்கு நரேந்திர மோடி மாதிரியே இருந்ததாம். அதை ஒரு பத்திரிகை செய்தியாக போட, இன்னும் ஒரு சில பத்திரிகைகள் நரேந்திரமோடி பயோபிக்கில் நடிச்சா நல்லாருக்கும்னும் போட்டு விட்டார்களாம்.

இன்னும் ஒரு படி மேல போயி நரேந்திர மோடியாகவே நடிக்கிறார்னு சொல்லி அதுல சிபி சத்யராஜ், திவ்யா சத்யராஜ் தான் அறிவிக்கிறாங்கன்னும் விளம்பரப்படுத்த அது இன்னும் உறுதியாகி விட்டதாம். மழை பிடிக்காத மனிதன் படத்தில் சிறப்பத் தோற்றத்தில் சத்யராஜ் செம மாஸாக நடித்துள்ளாராம். தெலுங்கு, இந்தி, தமிழ், வெப்சீரிஸ்னு அவ்ளோ பிசியாக இருக்கிறார்.

இதையும் படிங்க… மணிரத்னத்தை தூக்கி சாப்பிட்ட உலக நாயகன்!.. கமலோட வில்லன் கேரக்டருக்கும் ரஜினிக்கும் தொடர்பு?..

இது குறித்து தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கேட்கும்போது, ‘இதுக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? என்னை யாராவது கேட்டாங்களா? அப்படி கேட்டா தானே சொல்ல முடியும். நான் இப்படி நடிக்கணும்னு 10 வருஷத்துக்கு முன்னாடியே நிழல்கள் ரவி எங்கிட்ட சொல்லிட்டாரு. அப்போ நரேந்திரமோடி குஜராத்ல முதல்வரா இருந்தாரு’ என்று சத்யராஜ் சொன்தாக தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top