‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு செம மாஸ் ஸ்பீச் கொடுத்தார். வாங்க என்னன்னு பார்ப்போம்.
எம்ஜிஆர் ஆசைப்பட்டு நடிக்க முடியாத ஒரே கேரக்டர் பெரியார் தான். அந்த வேடத்துல நான் நடிச்சிருக்கேன். விஜயகாந்துக்கும் எனக்கும் அவ்ளோ நட்பு. எங்களுக்குள்ள நடந்த காமெடி தான் அதிகம். இன்னைக்கு விஜயகாந்த் நடிக்க வேண்டிய கேரக்டர்ல என்னை நடிக்க வச்சிருக்கார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
டைரக்டர் சக்தி சிதம்பரம் சொல்வாரு. ‘இந்த அப்பாவியா முகத்தை வச்சிக்கிட்டு இந்த முரளி ஷபேஸ் வச்சிக்கிட்டு ஏமாத்தாதீங்க’ன்னு சொல்வார். அப்படி ஒரு அப்பாவித்தனமான முகத்துக்கு சொந்தக்காரர் தான் தனஞ்செயன்.
விஜய் ஆண்டனி கூட நடிக்கறது எனக்கு ரொம்ப வசதி. வாத்தியாரோட உன்னை அறிந்தால் பாடலுக்கு சிறந்த உதாரணம் அவர் தான். எனக்கு விக்குக்காகவே ரூம் போட்டு யோசிப்பாங்கன்னு நினைக்கிறேன். நல்லவேளை எனக்குத் தலை இப்படி இருந்தது சௌகரியமாப் போச்சு. சில நேரம் சில மைனஸ் தான் பிளஸா இருக்கும்.
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததனால சாருக்கு இல்ல. அவருக்காக நாம வேண்டிக்குவோம்னு சொல்வாங்க. கடைசில பார்த்தா எனக்காக வேண்டிக்கிட்டது எக்கச்சக்கமான ஆள்கள். என்னைத் தவிர. கடவுளுக்கு என்னைப் பிடிக்கும். ஏன்னா அவரை நான் டிஸ்டர்ப் பண்றதே இல்லேல. அப்ளிகேஷனா போடுறது. என் படம் ஓடணும்னு. அந்த ஆளு என்ன செய்வாரு? ரெண்டு ஆளு எலெக்ஷன்ல நிக்கிறாங்க. யாரோ ஒருத்தரு தாங்க ஜெயிக்க முடியும் அதுதாங்க இயல்பு.
இதையும் படிங்க… சத்யராஜ் போட்ட கண்டிஷன்… அதிகாலையில் துப்பாக்கியுடன் நின்ற தயாரிப்பாளர்…
கடவுளுக்கிட்ட நீங்க கட்டளை இடுறீங்க. ‘எப்படியாச்சும் என் படம் ஓடணும்’னு சொல்றாங்க. கடவுள் கேட்பாரு. ‘நீ யார்றா எனக்கு கட்டளை இடறதுக்கு? அவன் பாருய்யா சத்யராஜ்… அவன்பாட்டுக்கு போயிக்கிட்டு இருக்கான். ஏதாச்சும் நம்மள டிஸ்டர்ப் பண்றானா? என் மேல தப்பு கண்டுபிடிக்கிறானா?’ அதனால என் மேல அவருக்கு ரொம்ப பிரியம் என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார். அங்க தான் சத்யராஜ் நிக்கிறார். மனுஷனுக்கு இன்னும் அந்த லூட்டி இருக்குப் பாரு. அதை யாராலும் தொட முடியாதப்பான்னு தான் சொல்ல வேண்டும்.
Rj balaji…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…
கார்த்திக் சுப்புராஜ்…
Surya: நடிகர்…