தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பங்கம் வரக்கூடாது!.. ஷாருக்கான் படத்துக்கு கறார் கண்டிஷன் போட்ட கட்டப்பா!..
கிண்டல், கேலி, தெனாவெட்டு, திமிரு, பந்தா என எல்லாமே கலந்த கலவைன்னா சத்யராஜ். அந்த அளவுக்கு கேரக்டரோடு பொருந்திப் போகிறவர். பெரியார் மேலும், தமிழ் மேலும் ஆழ்ந்த பற்று கொண்டவர். ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் சினிமாவுக்கு வருவதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அம்மா அதற்கு ஒத்துக்கொள்ளாத நிலையில் அவருக்குத் தெரியாமல் சினிமா ஆசையில் சென்னை வருகிறார்.
அங்கு அவரது ஊர்க்காரரான சிவக்குமாரை அன்னக்கிளி படப்பிடிப்பில் பார்க்கிறார். நாங்க எல்லாம் இங்கு வந்து கஷ்டப்படுகிறோம். நீ ஏன் அப்படி கஷ்டப்பட வேண்டும் என கேட்கிறார். அதன்பிறகு நாடக உலகில் நுழைந்து சட்டம் என் கையில் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் அடியாளா நடிக்கிறார்.
1978 ல் இருந்து 1985 வரை சின்ன வில்லனாக, பெரிய வில்லனாக நடித்தார். 19858ல் தான் சாவி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். முதன் முதலில் அவரை நமக்கு நல்லா தெரிய வந்தது கடலோரக்கவிதைகள் படத்தில் தான். அருமையான நடிப்பை பாரதிராஜா அவரிடம் இருந்து முட்டம் சின்னப்பதாஸை அப்படியே கொண்டு வந்து இருப்பார். அதே போல வேதம் புதிது படத்தில் பாலுத்தேவராக முற்றிலும் மாறுபட்ட விதத்தில் நடித்திருப்பார்.
கவுண்டமணியுடன் இணைந்து புதுமனிதன், பங்காளி படத்தில் சத்யராஜ் அடிக்கும் லூட்டி தாங்கவே முடியாது. இவர்களுடன் மணிவண்ணனும் சேர்ந்து விட்டால் தியேட்டரில் சிரிப்பலைக்கு பஞ்சமே இல்லை. இதற்கு என்ன காரணம்னா அவர்கள் மூவருமே கொங்கு தமிழ், ஒரே கருத்துடையவர்கள், அரட்டை அடிப்பவர்கள். அதனால் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி நல்லா ஒத்துப்போகும்.
தமிழ் மேல அக்கறை கொண்டவர் இவர். எப்படின்னா, ஷாருக்கான் நடித்த ஒரு இந்திப்படத்தில் கதாநாயகிக்கு அப்பாவா நடிக்கக் கேட்டார்களாம். அதற்கு என்னோட தமிழுக்குப் பங்கம் வரக்கூடாது. அதேபோல், தமிழ்நாட்டு மக்கள் இப்படித்தான் என பொதுவாக நக்கலடிப்பது போல வசனம் இருக்க கூடாது’ என கண்டிஷன் போட்டிருக்கிறார் புரட்சித்தமிழன் சத்யராஜ். பெரியார் படத்தில் அப்படியே அசல் பெரியாராகவே வாழ்ந்து இருப்பார். அதே போல் 9 ரூபாய் நோட்டு படத்தில் இவர் நடிப்பைப் பார்த்து விட்டு அழாதவர்களே இருக்க முடியாது.
வால்டர் வெற்றிவேல் படத்தில் பொளந்து கட்டியிருப்பார். அதைப் பார்த்த நிருபர்கள் படத்தில் பொளந்து கட்டியிருக்கிறீர்களே நிஜத்தில் இப்படி சண்டை போடுவீர்களான்னு கேட்க, ஒரு ஆளை அடிப்பேன். மத்தவங்களை எல்லாம் ஆளை வச்சித் தான் அடிக்கணும்னு சொன்னாராம்.
இவரது கேரக்டருக்கு ஏற்ப சவுண்டு பார்ட்டி, நடிகன், லொள்ளு, மகாநடிகன்னு படங்களுக்குப் பெயரே வைத்தனர். அமைதிப்படை சத்யராஜிக்கு ஒரு மைல் கல்.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.