லோகேஷ் கனகராஜிடம் வாய்ப்பு கேட்ட சத்தியராஜ்!.. விக்ரமுல விட்டதை கூலில பிடிச்சிட்டார்!..

Published on: June 11, 2024
lokesh
---Advertisement---

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கமல், சத்தியராஜ், அம்பிகா, டிம்பிள் கபாடியா, ஜனகராஜ் என பலரும் நடித்து 1986ம் வருடம் வெளியான திரைப்படம்தான் விக்ரம். இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். இந்த படத்தை அப்போது பல ஹிட் படங்களை கொடுத்த ராஜசேகர் இயக்கியிருந்தார்.

37 வருடங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் கமல்ஹாசன் நடித்து விக்ரம் படம் உருவானது. இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், காயத்ரி, அர்ஜூன் தாஸ் என பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 2022ம் வருடம் வெளியான படம் பல வருடங்களுக்கு பின் கமலுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இதையும் படிங்க: மோடியை மேடை ஏத்தியாச்சு! அடுத்ததா என்ன? சென்னை வந்ததும் ரஜினி நேரா எங்க போனார் தெரியுமா

இப்படம் 400 கோடியை தாண்டி வசூல் செய்து ராஜ்கமல் நிறுவனத்துக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. அதன்பின்னரே சிம்புவை வைத்து ஒரு படம், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் என ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் இறங்கியது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. ஆனால், சிம்பு படம் இன்னும் துவங்கப்படவில்லை.

விக்ரம் படத்தின் வெற்றி கமலை உற்சாகப்படுத்த தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசி ஆனார். பிரபாஸுடன் கல்கி, மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப், ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பு – அறிவு கூட்டணியில் ஒரு படம் என டேக் ஆப் ஆனார். இந்நிலையில், விக்ரம் படம் உருவானபோது லோகேஷ் கனகராஜிடம் சத்தியராஜ் வாய்ப்பு கேட்ட சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது.

vikram movie
vikram movie

இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய சத்தியராஜ் ‘விக்ரம் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது லோகேஷை சந்தித்தேன். எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு இல்லையா? எனக்கேட்டேன். நீங்கள்தான் முதல் பாகத்திலேயே செத்து போயிடுறீங்க. இதுல நீங்க எப்படி நடிக்க முடியும்?’ எனக்கேட்டார்.

அதற்கு நான் ‘செத்துப்போன வில்லன் சத்தியராஜுக்கு மனைவி இறக்கமாட்டாளா? அவன் ஒரு இண்டர்நேசனல் வில்லன். அவனுக்கு பிரான்ஸ், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் சின்ன வீடு இருக்காதா?.. ஒரு மகன் இருக்க மாட்டானா?. அப்படி நான் நடிக்கிறேன்’ என சொன்னேன். ஆனால், லோகேஷ் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனாலும், அவரின் இயக்கத்தில் கூலி படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி’ என சத்தியராஜ் சொல்லி இருந்தார்.