கஷ்டப்பட்டு சம்பாதிச்சவன் நான்...பேர் வாங்குறது விஜய்யா...? செம காண்டில் பேசிய சத்யராஜ்...
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு முன்னனி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். ஆரம்பத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டிய சத்யராஜ் வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த சத்யராஜ் சமீபத்தில் வெளியாகும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இன்னும் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார். இவரது பாணியில் இவரது மகனும் நடிகருமான சிபி சத்யராஜ் முத்திரையை பதித்து வருகிறார்.
இதையும் படிங்கள் : என்.எஸ்.கே முதல் சோ வரை….எம்.ஜி.ஆர் படங்களில் இதுவரை நடிக்காத ஒரே நகைச்சுவை நடிகர்…!
சிபி சத்யராஜ் தீவிரமான விஜய் ரசிகனாம். ஒரு சமயம் இதை பற்றி பேசிய நடிகர் சத்யராஜ் தான் நடிகர் விஜய் மீது மிகவும் கோபமாக இருப்பதாக தெரிவித்தார். அதாவது வில்லனாக சில படங்களில் நடித்து தன் விடாமுயற்சியால் படிபடியாக உயர்ந்து பல நல்ல வெற்றிப் படங்களை கொடுத்து நல்ல நிலைமைக்கு வந்தபிறகு கஷ்டப்பட்டு ஒரு வீட்டை கட்டினேன்.
அந்த வீட்டில் முழுவதும் பார்த்தால் நடிகர் விஜய் படம் மட்டுமே இருக்கும். எல்லாம் என் மகனின் அட்டூழியம் தான். அப்பா கஷ்டப்பட்டிருக்கிறாரே என்பதற்காகவாவது என்னுடைய போட்டோ வைப்பானு பார்த்தால் ஒரு இடம் பாக்கி இல்லாமல் விஜய் போட்டோக்களை மட்டும் சுவரில் மாட்டிக் கொண்டு கடுப்பேற்றி விட்டான் என தனக்கே உரிய பாணியில்கூறினார்.